கம்பராமாயணம் 1948 · அயோத்தியா 5.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“எந்தை -; வினைக்கு அரு மெய்ம்மையன் - செய்தற்கு அரிய சத்தியத்தை உடைய தயரதன்; “மனைக்கு அரும் புதல்வனை - தன் குடிக்கு அரிய மகனை; வனத்து விட்டனன்” - காட்டிற்குச் செல்லுமாறு அனுப்பினான்; என்றல் - என்று உலகோரால் சொல்லப்படுதல்; மன்னவன் தனக்கு - அரசனுக்கு; அருந்தவம் - அருமையான தவமாகும்; அது - அம்மன்னவன் ஆணையை; தலைக்கொண்டு - சிரமேல் தாங்க; ஏகுதல் - வனம் செல்லுதல், எனக்கு அருந்தவம் - எனக்கு அரிய தவமாகும்; இதற்கு நீ இரங்கல் - இதற்கு நீ இரங்காதே.
அரிய மகனைக் காட்டிற்கு அனுப்புதல், அதுவும் அறத்தைக் காப்பாற்ற வேண்டிய அனுப்புதல் என்பது செயற்கரும் தவம் ஆதலின், அது “மன்னவனுக்கு அருந்தவம்' என்றான். அதனை மகன் நிறைவேற்றினால் அன்றி அத் தவம் நிலை பெறாதாம். ஆகவே, அதன்படி நடந்து வனம் செல்லுதல் எனக்குத் தவம் என்றான் இராமன். இருவர் தவத்தையும் கெடுக்க எண்ணுதியோ என்பது குறிப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'That it should be said, "The man of truth, true in a way hard to achieve,
- sent his precious son away from his house into the forest,"
- is the king's great penance; to take that on my head and go
- is my great penance; do not grieve for this, my father.'
What the poem says
Irāmaṉ presents the exile as a sacred discipline for both father and son. For Tacarataṉ to keep his word even at the cost of his beloved son is the king's austerity; for Irāmaṉ to carry out that command is his own. The king's penance is only complete if the son fulfils it, so Cumantiraṉ should not try to spoil both.