கம்பராமாயணம் 195 · பால 5.27

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தரு உடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான் 'எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும்' என்ன,
இரவி, மற்று, 'எனது கூறு அங்கு அவற்கு இளையவன்' என்று ஓத
அரியும் மற்று, 'எனது கூறு நீலன்' என்று அறைந்திட்டான் ஆல்.

பொருள் · Meaning in Tamil

தருஉடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான் - கற்பகம் முதலிய ஐந்து மரங்களையுமுடைய தேவர்களுக்கு அரசனான இந்திரன் சொல்லலுற்றான்; எனது கூறு மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன - எனது அம்சமானது, பகைவர்களுக்கு இடி போன்ற வாலியும், அவன் மகன் அங்கதனும் ஆகும் என்றுரைக்க; இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத - சூரியன், பின்னை, எனது அம்சம் அங்கேயே அந்த வாலிக்குத் தம்பியான சுக்கிரீவன் என்று சொல்ல; அரியும் மற்று எனது கூறுநீலன் என்று அறைந்திட்டான் - நெருப்புக் கடவுள் பின்னை, எனது அம்சம் “நீலன்” என்னும் வானர வீரனாகும் எனக் கூறினான்.

ஆல்: அசை. கூறு: பாகம் (அம்சம்). மருவலர்: பகைவர். அரி: நெருப்பு. கடவுள்: மனம், மொழி, மெய்களின் உணர்வுகளைக் கடந்து நிற்கும் பரம்பொருளைக் குறிப்பதாயினும் உபசாரமாக மற்றைத் தேவர்களையும் குறிப்பதாகும்.

இந்திரன் வாலி, அவன் மகன் அங்கதன் ஆகிய இருவராகவும், சூரியன் வாலியின் தம்பி சுக்கிரீவனையும், அக்கினி, நீலன் என்ற வானரத் தலைவனாகவும் பிறப்பதாகக் கூறினர் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The king of the gods, lord of the heavenly trees, declared: 'My portion
  2. is Vālī, who is like a thunderbolt to his foes, and his son';
  3. the Sun then said, 'My portion is his younger brother there';
  4. and Agni then announced, 'My portion is Nīlaṉ.'

What the poem says

The gods announce how they will be born among the monkeys. Indra will be Vālī, the thunderbolt-like monkey king, and also his son Aṅkataṉ. The Sun will be Vālī's younger brother Cukkirīvaṉ.

Agni, the fire god, will be Nīlaṉ, a monkey commander. The poet sets out the divine origins of the heroes who will later fight for Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taruvuṭaik kaṭavuḷ vēntaṉ cāṟṟuvāṉ 'eṉatu kūṟu
maruvalarkku acaṉi aṉṉa vāliyum makaṉum' eṉṉa,
iravi, maṟṟu, 'eṉatu kūṟu aṅku avarkku iḷaiyavaṉ' eṉṟu ōta
ariyum maṟṟu, 'eṉatu kūṟunīlaṉ' eṉṟu aṟaintiṭṭāṉāl.