கம்பராமாயணம் 1950 · அயோத்தியா 5.33

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1`'முனிவனை எம்பியை 'முறையில் நின்று அரும்
புனித வேதியர்க்கும் மேல் உறை புத்தேளிர்க்கும்
இனியன இழைத்தி ' என்று இயம்பி , 'எற்பிரி
தனிமையும் தீர்த்தி ' என்று உரைத்தி '' தன்மையால் .

பொருள் · Meaning in Tamil

முனிவனை - வசிட்ட முனிவனைக் கொண்டு; “முறையில் நின்று - நெறியில் நின்று; அரும் புனித வேதியர்க்கும் - அருமையான தூய அந்தணர்களுக்கும்; மேல் உறை புத்தேளிர்க்கும் - மேல் உலகில் வசிக்கும் தேவர்களுக்கும், இனியன - நன்மையான செயல்களை; இழைத்தி' - செய்வாயாக; என்று எம்பியை இயம்பி - என்று என் தம்பி பரதனுக்குச் சொல்லி; “என் பிரி - என்னைப் பிரிதலால் உளதாகும்; தனிமையும் தீர்த்தி” - தனிமைத் துன்பத்தையும் நீக்குக; என்று -; தன்மையால் உரைத்து - இதமாகச் சொல்வாய்.

பரதனுக்கு இராமன் சுமந்திரன்பால் சொல்லி அனுப்பிய செய்திகள் இதனுட் கூறப்பெற்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Through the sage, tell my brother: "Abiding by what is right,
  2. do what is good for the rare and holy brahmins
  3. and for the gods who dwell above";
  4. and gently tell him, "Take away the loneliness of our father, parted from me."'

What the poem says

Irāmaṉ now gives his message for Paratan, to be delivered through Vacittaṉ. Paratan is to rule justly, caring for the brahmins and honouring the gods, and to comfort their father in his loneliness now that Irāmaṉ is gone.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1`'muṉivaṉai empiyai 'muṟaiyil niṉṟu arum
puṉita vētiyarkkum mēl uṟai puttēḷirkkum
iṉiyaṉa iḻaitti' eṉṟu iyampi, 'eṟ piri
taṉimaiyum tīrtti' eṉṟu uraittu'' taṉmaiyāl.