கம்பராமாயணம் 1951 · அயோத்தியா 5.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“ஈண்டு - இவ்விடத்து; அன்னையால் விளைந்தது - கைகேயியால் உண்டாக்கியது; வெவ்வியது ஒரு கவ்வை - கொடியதாகிய ஒரு துன்பம்; என்று -; இறையும் - சிறிதளவும்; தன் கருத்தின் - (பரதன்) தன்னுடைய மனத்தின்கண்; நோக்கலன் - கருதாதவனாய், எவ் அருள் என் வயின் வைத்தது - எத்தகையதொரு அருளை என்னிடம் (பரதன்) வைத்துள்ளானோ; அவ் அருள் - அத்தகைய அருளை; அவன் வயின் - அந்தத் தயரத மன்னனிடத்தும்; அருளுக” - காட்டுவானாக; என்றி - என்று சொல்லுவாய். '
கைகேயிமாட்டும், தயரதன்மாட்டும் என்னிடம் உள்ள அன்பிற் சிறிதும் குறையாது அன்போடு நடந்துகொள்ளுமாறு பரதன்பால் கூறவும் என்றான். “ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால், தாய் எனும் பெயர் எனைத் தடுக்கற்பாலதோ” என்று பரதன் கூறுவதை இங்கே கருதுக. (2173.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Tell him: "Without a moment's thought in your mind
- that some cruel wrong has come about here through your mother,
- whatever love you have for me,
- show that same love to him, with sweet words."'
What the poem says
Irāmaṉ asks that Paratan be told not to hold against anyone the harm his mother Kaikēyi has caused, but to show their father the same love he has always shown Irāmaṉ. The commentary points ahead to a later verse in which Paratan says only fear of Irāmaṉ's displeasure keeps him from striking his mother.