கம்பராமாயணம் 1953 · அயோத்தியா 5.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1“ ‘ஏழிரண்டு ஆண்டும் நீத்து , ஈண்ட வந்து , உனைத்
தாழ்குவன் திரு அடி , தளரல் ஈண்டு ' எனச்
சூழி வெம் கட களிற்று அரசற் சொல்லிப் பின் ,
வாழி மாதவன் சொலால் மனம் தெருட்டுவாய் . ''
பொருள் · Meaning in Tamil
“ஏழ் இரண்டு ஆண்டும் நீத்து - பதினான்கு ஆண்டுகளும் கழித்து; ஈண்ட வந்து - விரைவாக வந்து; உனைத் திருவடி தாழ்குவென் - உனது திருவடிகளை வணங்குவேன்; தப்பிலேன் - தவற மாட்டேன்; என - என்று; சூழி - முகபடாம் அணிந்த; வெங்களிற்று இறை தனக்குக் - கொடிய யானையை உடைய தயரத மன்னனுக்குச் சொல்லி; சோர்வு இலா - தளர்ச்சி இல்லாத; மாதவன் சொலால் - வசிட்ட முனிவன் சொல்லால்; மனம் தெருட்டுவாய் - மனத்தைத் தெளிவிப்பாய். '
'வாழி' அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- '"When twice seven years have passed, I will come quickly
- and bow at your holy feet; I will not fail" —
- say this to the king of fierce, caparisoned elephants,
- and through the words of the tireless great sage, set his mind at rest.'
What the poem says
Cumantiraṉ is to promise the king, in Irāmaṉ's name, that when fourteen years have passed Irāmaṉ will hurry back and bow at his feet without fail. Vacittaṉ's words are to help calm the king.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“‘ēḻ iraṇṭu āṇṭum nīttu, īṇṭa vantu, uṉait
tāḻkuveṉ tiruvaṭi, tappilēṉ' eṉac
cūḻi veṅ kaḷiṟṟu iṟai taṉakkuc cōrvu ilā
vāḻi mā tavaṉ colāl maṉam teruṭṭuvāy.''