கம்பராமாயணம் 1958 · அயோத்தியா 5.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வேறு இலா அன்பினான் - (சிறிதும்) வேறுபடாத அன்புடையவனாகிய சுமந்திரன்; அவ் வழி - அவ்விடத்து; அவலம் சிறிது ஆறினன் போல் - துயரம் சிறிது தெளிந்தவன் ஆகி, (இராமனிடம்), “விடை தந்தீக” - விடை கொடுத்தருளுக; எனா - என்று சொல்லி (விடை பெற்று); ஏறு சேவகன் தொழுது - வீரனாகிய இராமனை வணங்கி; இளைய மைந்தனை - இலக்குவனை: “கூறுவது யாது - (அரண்மனை சென்று) சொல்ல வேண்டுவது என்ன; ' என - என்று கேட்க; இனைய - (பின் வருவனவற்றை) இத்தகைய சொற்களை; கூறினான் - அவன் சொன்னான்.
இராமன், சீதை இருவர்பாலும் செய்தி அறிந்த சுமந்திரன் இலக்குவனையும் அதுபோல் வினாவினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then, as if his grief had eased a little,
- he whose love never wavered said, 'Give me leave,'
- bowed to the lordly hero, and asked the younger prince,
- 'What shall I say?' — and he answered thus.
What the poem says
Cumantiraṉ composes himself a little, asks Irāmaṉ for leave to go, and bows to him. Having taken messages from Irāmaṉ and Cītai, he asks Ilakkuvaṉ what he should say for him. Ilakkuvaṉ's answer follows.