கம்பராமாயணம் 1959 · அயோத்தியா 5.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“எம் கோமகற்கு - எம் தலைவனாகிய இராமனுக்கு; உரை செய்து - இவ்வரசு உனக்கு உரியது என்று சொல்லி; உறுதி ஆக்கிய - அரசவையில் பலர் முன்னிலையில் உறுதிப்படுத்திய; தரை கெழு செல்வத்தை - கோசல நாட்டொடு பொருந்திய அரசாட்சிச் செல்வத்தை; தவிர - இராமன் ஆளாமல் தவிரும்படி; மற்று ஒரு - வேறாகிய ஒரு; விரை செறி குழலி மாட்டு - மணம் பொருந்திய கூந்தலை உடைய கைகேயியிடம்; அளித்த - கொடுத்துவிட்ட; மெய்யனை - சத்திய வாக்கினனாய தயரதனை; அரைசன் என்று - அரசன் என்று; இன்னமும் அறையற்பாலதோ?” - இனியும் சொல்லுதல் தகுதியுடையது ஆகுமோ. '
அரசவையில் உறுதிசெய்ததை அந்தப்புரத்தில் மாற்றியவன் சத்திய சந்தனா, அரசனா என்று வெகுட்சியாகக் கேட்கிறான் இலக்குவன். “மெய்யனை' என்பது இகழ்ந்துரைத்த வார்த்தை. “அவன் அரசனாதற்குத் தகுதியுடையவன் அல்லன்; அவனுக்கென்ன நான் செய்தி சொல்லியனுப்புவது ' என்கின்ற சினவெறுப்புப் புலனாதல் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The land-rich realm he proclaimed and made secure
- for our prince, he took back and gave instead
- to one other woman with fragrant hair — that man of truth:
- should he still be spoken of as king?'
What the poem says
Ilakkuvaṉ is still angry. Tacarataṉ publicly promised the kingdom to Irāmaṉ, then took it back in private and gave it to a woman, Kaikēyi. 'Man of truth' is sarcastic. Does such a man still deserve to be called king? The implication is that Ilakkuvaṉ has nothing to say to him.