கம்பராமாயணம் 1963 · அயோத்தியா 5.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(சுமந்திரன்) தேர்ப் பொறி - தேராகிய பொறியை; கூட்டினன் - தயார் செய்தான்; கூட்டி - அவ்வாறு ஆயத்தம் செய்து; புரவி - குதிரைகளை; கோள் முறை - கொள்ளுகின்ற முறையிலே; பூட்டினன் - தேரில் பூட்டினான்; அப்புரவி போம் நெறி காட்டினன் - அந்தக் குதிரைகளுக்குப் போகும் வழியைக் காண்பித்தான்; ஒருவரும் உணர்வு உறாமல் - (உறங்குகின்ற உடன் வந்த நகர மாந்தர்) ஒருவரும் சிறிதும் உணராதபடி; தன் கல்வி மாட்சியால் - தன் தேரோட்டும் கல்விச் சிறப்பால்; ஓட்டினன் - (ஒலியில்லாமல்) ஓட்டினான்.
குதிரைகளைத் தேரிற் பூட்டுங்கால் சேணம் இட்டுக் கண்ணை மறைப்பர் ஆதலின், “போம் நெறி காட்டினன்' என்றார். இனி, தேர் சென்ற சுவடுகளைக் காட்டிச் சென்றான் என்றல் இங்குச் சிறப்பின்மை அறிக. கூட்டினன் - கூட்டி, காட்டினன் - காட்டி, என்று ஒன்றை ஒன்று சொற்கள் தொடர்தலின் 'ஏகாவளி' என்னும் அலங்காரமாம். “கோள் முறை” என்பது குதிரைகள் வலம், இடம் பூட்டும் முறையாகும். “ஏ” காரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He made the chariot ready; having made it ready, he yoked
- the horses in their proper order; he showed those horses
- the way to go; and having shown it, by the excellence of his skill
- he drove away without anyone knowing.
What the poem says
Cumantiraṉ prepares the chariot, harnesses the horses each in its proper place, and points them on their way, since blinkered horses must be guided. Then, with all his skill, he drives off so quietly that none of the sleeping citizens wakes. Each step is picked up by the next phrase, the chained 'single-strand garland' figure.