கம்பராமாயணம் 1964 · அயோத்தியா 5.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“ஐயனும் - இராமனும்; அல்லின் நாப்பண் - நள்ளிரவில், தையல்தன் கற்பும் - சீதையின் கற்பும்; தன் தகவும் - தன் மேன்மைப் பண்பும்; தம்பியும் - இலக்குவனும்; மை அறு கருணையும் - குற்றமற்ற அருளும்; உணர்வும் - ஞானமும்; வாய்மையும் - சத்தியமும்; செய்ய தன் வில்லும் - நேரிய தனது வில்லும் (ஆகிய இவற்றையே); சேமம் ஆகக் கொண்டு - தனக்குப் பாதுகாவலாகக் கொண்டு; போயினான் - சென்றான்.
தகவும், கற்பும், கருணையும், வாய்மையும் அருவப் பொருள்கள். தம்பியும், வில்லும் உருவப்பொருள்கள். இரண்டையும் உள்ளும் வெளியும் பாதுகாக்கும் உதவிகளாகக் கூறியது ஒரு நயம். 'வில்லுமே' “ஏ' காரம் சிறப்பு. 'நாப்பணே' 'ஏ' காரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Taking as his only protection the chastity of his lady, his own worth, his brother,
- his flawless compassion, his wisdom, his truthfulness
- and his own true bow,
- the lord too set out, in the middle of the night.
What the poem says
At midnight Irāmaṉ sets off into the forest with nothing to protect him but these: Cītai's chastity, his own worth, compassion, wisdom and truthfulness, and two things that can be seen, his brother and his bow. The intangible virtues guard him from within, and the brother and bow guard him from without.