கம்பராமாயணம் 1965 · அயோத்தியா 5.48

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை அரக்கரை - வஞ்சகத் தொழிலைச் செய்வதற்கு உதவியாயிருக்கும் வாழ்க்கை உடைய இராக்கதரை; பொருந்தி - நட்பாகச் சேர்ந்திருந்து; அன்னார் - அந்த அரக்கரின்; செய்வினைக்கு - செய்கின்ற (கொலை, களவு, கள், காமம், பொய் என்கின்ற) தீத் தொழிலுக்கு; உதவும் நட்பால் - உதவுகின்ற சிநேகத் தன்மையால்; செல்பவர் - அந்த அரக்கரை அழிக்கச் செல்லுகின்ற இராமலக்குவரை; தடுப்பது ஏய்க்கும் - செல்லாத படி தடுப்பதை ஒத்திருக்கின்ற; மைவிளக்கியதே அன்ன - அஞ்சனத்தை மேலும் விளக்கிக் கருமை ஆக்கியது போல் உள்ள; வயங்கு இருள் - விளக்கிய இருட்டை; துரக்க - ஓட்டிவிடுமாறு; வானம் - ஆகாயம்; கைவிளக்கு - சிறு விளக்கை; எடுத்தது என்ன - எடுத்து நிற்கிறது என்று சொல்லும்படி; கடவுள் திங்கள் - தெய்வத்தன்மை வாய்ந்த சந்திரன்; வந்தது - தோன்றியது.

அரக்கர் கருநிறம் உடையவர்; இருள் கருமையானது. அரக்கர் தீய தொழில் செய்பவர்; இருள் தீய தொழில்கள் நிகழ்வதற்குப் பொருந்தி உதவி செய்வது; இதனால் அரக்கர்க்கு நட்பாக இருக்கிற இருள் என்றார். அரக்கரை அழிக்கச் செல்கிற இராமலக்குவர்கள் வனத்தில் மேற்செல்லாதபடி அவ்விருள் தடுக்கிறது. அப்போது வானம் அவர்கள் செல்வதற்கு உதவியாகக் கைவிளக்கை எடுத்துக் காட்டுவது போல் நிலவொளி தோன்றியது என்று சந்திரோதயத்தைத் தற்குறிப்பேற்றம் செய்தார். 'ஏறனாற் கிருளை நீங்கக் கைவிளக் கேந்தி யாங்கு, வீறுயர் மதியம் க் (சீவக. 1542) என்ற திருத்தக்க தேவர் வாக்கை இங்கு ஒப்பிடுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To drive off the gleaming darkness, black as collyrium rubbed bright,
  2. which seemed to be holding back those who went,
  3. out of friendship that aided the deeds of the demons
  4. whose way of life serves falsehood, the divine moon rose, as if the sky had lifted a lamp in its hand.

What the poem says

The moon rises. The poet imagines the night as a friend of the demons, dark as they are and a helper in their wicked deeds, trying to stop Irāmaṉ and Ilakkuvaṉ, who are on their way to destroy those demons. So the sky holds up the moon like a hand-lamp to light their path. A similar image of the moon as a lamp appears in the Cīvakacintāmaṇi.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poy viṉaikku utavum vāḻkkai arakkaraip porunti, aṉṉār
cey viṉaikku utavum naṭpāl celpavart taṭuppatu ēykkum
mai viḷakkiyatē aṉṉa vayaṅku iruḷ turakka, vāṉam
kaiviḷakku eṭuttatu eṉṉa vantatu kaṭavuḷ tiṅkaḷ.