கம்பராமாயணம் 1966 · அயோத்தியா 5.49

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தன்னை - (தருமமானது) தன்னை; மருமத்து - உயிர் நிலையில்; ஊன்றும் - தாக்குகின்ற; மறக் கொடும் பாவம் - கொலைத் தன்மை உடைய கொடிய பாவத்தை; தீர்க்கும் - அழிக்கின்ற; உரும் ஒத்த சிலையினோரை - இடியை ஒத்த வில்லை உடையவர்களாய இராம இலக்குவர்களை; ஒருப்படுத்து - (காட்டிற்கு வருமாறு) உடன்படுத்தி; உதவி நின்ற - தனக்கு உதவிசெய்து நின்ற; கருமத்தின் விளைவை எண்ணி - நல்வினைப் பயனை மனத்தின்கண் கருதி; களிப்பொடு - மகிழ்ச்சியோடு; காண வந்த - அவர்களைப் பார்ப்பதற்கு வந்த; தருமத்தின் வதனம் என்ன - தருமதேவதையின் முகம் போல; தனி வெண் திங்கள் - ஒப்பற்ற வெண்மையான சந்திரன்; பொலிந்தது - விளங்கியது.

அரக்கரை அழித்துத் தன்னைக் காக்க வந்த இராம இலக்குவர்களைக் காண வந்த தருமதேவதையின் முகம் போலச் சந்திரன் பிரகாசித்தான் என்றது தற்குறிப்பேற்றவணி. அரக்கர்க்குப் பயந்து இதுகாறும் ஒளிந்திருந்த தரும தேவதை தனக்கு உதவி செய்வார் வந்தபடியால் அவர்களைக் காண முகம் காட்டியது என்றார். மருமம் - உயிர்நிலை - தருமத்தின் ஆணிவேரையே அழிக்கிறவர் அரக்கர் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The matchless white moon shone like the face of Dharma,
  2. come in joy to see the fruit of the deed that had won over and set in motion
  3. the men whose bows are like thunder, who would end the cruel, murderous sin
  4. that strikes at its very vitals.

What the poem says

The poet gives the moonrise another meaning. The moon is the face of Dharma itself, which has been hiding in fear of the demons who strike at its heart. Now it shows its face in delight to see the two brothers, with bows like thunder, on their way to destroy those demons and rescue it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1marumattut taṉṉai ūṉṟum maṟak koṭum pāvam tīrkkum
urum otta cilaiyiṉōrai oruppaṭuttu, utavi niṉṟa
karumattiṉ viḷaivai eṇṇik kaḷippoṭu kāṇa vanta
tarumattiṉ vataṉam eṉṉap polintatu taṉi veṇ tiṅkaḷ.