கம்பராமாயணம் 1967 · அயோத்தியா 5.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காம்பு உயர் கானம் செல்லும் கரியவன் - மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ள காட்டில் செல்லுகின்ற இராமனது; வறுமை நோக்கி - (அரச அணிகள் எதுவும் இல்லாத) எளிய வறிய நிலையைப் பார்த்து; தேம்பின - மனம் வருந்தி; செங்கழு நீரும் - செங்கழுநீர்ப் பூக்களும்; குவிந்த போலும் - குவிந்தவற்றை ஒத்துள்ளன; ஆம்பலும் - (இரவில் மலர்ந்திருக்க வேண்டிய) ஆம்பற்பூக்களும்; சேரைப் பாம்பின தலைய ஆகி - சாரைப் பாம்பின் தலையைப்போன்றவையாய்; பரிந்தன - மனம் வருந்தி; குவிந்து சாய்ந்து - வாய் குவிந்து சாய்ந்து கிடந்தன; என்ற போது - என்றால்; நின்ற - மிகுந்துள்ள மற்றைய; போது - மலர்கள்; அலர்வது உண்டோ? - மலர்தல் உளதாகுமோ.
செங்கழுநீர் இரவில் குவிதல் இயல்பு. அதனை இராமன் வறுமை நிலை நோக்கி மனம் வருந்திக் குவிந்ததாகக் கூறியது கவிஞரின் தற்குறிப்பேற்றம். இனி இரவில் மலர்ந்திருக்கவேண்டிய ஆம்பல் (குமுதம்) மலரே குவிந்து சாய்ந்தன என்றால் மற்றை மலர்களைச் சொல்லவே வேண்டாம் என்றார். ஓரறிவுயிர்கள் இராமன்பால் காட்டும் அன்பின் செறிவைப் புலப்படுத்தினார். மாலை நேரத்தில் அதாவது முன்னிரவில் குமுதம் மலராதிருத்தலை, 'குண்டு நீர் ஆம்பலும் குவிந்தன இனியே, வந்தன்று வாழியோ மாலை' (குறுந். 122.) என்பது கொண்டு அறிக. குவிந்த ஆம்பலுக்குச் சாரைப் பாம்பின் தலை உவமை. படம் எடுக்காத பாம்பு சாரை ஆதலின் அது உவமையாயிற்று. சாரை - சேரை ஒன்றே. என்ற போது - போது - காலப் பெயர் - நின்ற போது - மலர் பொழுது என்னும் காலப் பெயர் அக்காலத்தே மலரும் மலருக்குப் பெயராய்ப் போது என வந்தது. மலர் மலர்வதை வைத்துக் காலை - உச்சி மாலை முன்னிரவு, நள்ளிரவு, பின்னிரவு எனக் காலங்களை அறிதல் பழக்கம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing the poverty of the dark one going into the forest of tall bamboo,
- the red water lilies seemed to have closed up in sorrow;
- and when even the white water lilies, grieving, closed and drooped
- like the heads of rat snakes, could any other flower stay open?
What the poem says
Even the plants grieve for Irāmaṉ, who walks into the bamboo forest with none of a prince's finery. The red lilies, which shut at night anyway, seem to close out of pity. More striking, the white night-lilies, which ought to open at night, droop shut like the heads of rat snakes, which do not raise a hood. If they will not bloom, no other flower will.