கம்பராமாயணம் 1968 · அயோத்தியா 5.51

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும் - மை மலை ஒத்த இராமனும்; அழகன்தன்னை - அவ்விராமனை; எஞ்சல் இல் - குறைதலில்லாத; பொன் போர்த்து அன்ன - பொன்னால் மூடினாற் போன்ற; இளவலும் - இலக்குவனும்; வெஞ்சிலைப் புருவத்தாள் தன் மெல்லடிக்கு ஏற்ப - கொடிய வில்லை ஒத்த புருவத்தை உடைய சீதையின் மென்மையான பாதத்திற்குப் பொருந்தும்படி; வெண் நூல் பஞ்சு இடைப்படுத்தால் அன்ன - வெண்மையான நூலை உண்டாக்கும் பஞ்சை வழியெல்லாம் பரப்பி வைத்தாற் போல; இளநிலா - இளைய நிலவொளியை; இந்து என்பான் - சந்திரன் என்கிறவன்; பரப்ப - எங்கும் பரவச் செய்ய; போனார் -.

காட்டில் பரவிய நிலவொளி வெண்பஞ்சைப் பரப்பியது போன்றுள்ளது. சீதையின் மெல்லிய கால்களுக்குக் காட்டுவழி கூர்ங்கற்களால் உறுத்துமே என்று கருதிச் சந்திரன் வெண்பஞ்சைப் பரப்பியது போல நிலவொளி பரந்தது என்பது தற்குறிப்பேற்றம். இராம இலக்குவர்கள் நிறத்தால் கருமையும், பொன்மையும் உடையவர்களே அன்றி உருவத்தால் ஒரே வடிவம் உடையவர்கள் என்பதால் 'அழகன் தன்னைப் பொன் போர்த்தன்ன இளவல்' என்றார். பின் சடாயு இவர்களைக் கானகத்தில் முதலில் கண்டபோது ' என் துணைவன் ஆழியான், ஒருவனை, இருவரும் க துதுவ்பு (2704.) என்று பேசுவதாகக் கம்பர் கூறுவதை இங்குக் கருதுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The handsome one, like a mountain of collyrium, and the younger one,
  2. who looked like that handsome one wholly covered in gold, went on,
  3. as he who is called the Moon spread white moonlight
  4. like cotton laid down for spinning white thread, to suit the soft feet of her whose brows are cruel bows.

What the poem says

The three walk on by moonlight. Irāmaṉ is dark as a hill of collyrium; Ilakkuvaṉ looks exactly like him but golden, as if his brother had been wrapped in gold. The white moonlight on the path looks like soft cotton spread out so that Cītai's tender feet will not be hurt by the stones, which is the poet's fancy for why the moon shines.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1añcaṉak kuṉṟam aṉṉa aḻakaṉum, aḻakaṉtaṉṉai
eñcal il poṉ pōrttaṉṉa iḷavalum, intu eṉpāṉ,
veñcilaip puruvattāḷtaṉ mel aṭikku ēṟpa veṇ nūl
pañcu iṭaip paṭuttālaṉṉa veṇ nilāp parappap pōṉār.