கம்பராமாயணம் 1970 · அயோத்தியா 5.53

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பரிதி வானவனும் கீழ்பால் பரும் வரை பற்றா முன்னம்
திருவின் நாயகனும் தென்பால் ஓசனை இரண்டு சென்றான் ;
அருவி பாய் கண்ணும் புண்ணாய் அழிகின்ற மனமும் தானும்
துரித மான் தேரில் சென்றான் செய்தது சொல்லல் உற்றாம் .

பொருள் · Meaning in Tamil

பரிதி வானவனும் - சூரிய தேவனும்; கீழ்பால் பருவரை - கிழக்கே உள்ள உதயமலையில், பற்றா முன்னம் - பற்றித் தோன்றும் முன்னர்; திருவின் நாயகனும் - திருமகள் கேள்வனாகிய இராமனும்; தென்பால் - தெற்கே; இரண்டு யோசனை போனான் - இரண்டு யோசனை அளவுள்ள தூரம் சென்றான்; அருவி பாய் கண்ணும் - அருவி போலக் கண்ணீர் வழிகின்ற கண்ணும்; புண்ணாய் அழிகின்ற மனமும் - புண்பட்டு வருந்துகின்ற மனமும்; தானும் - தானுமாகி; துரித மான் தேரில் - வேகமான குதிரைகள் பூட்டிய தேரில்; போனான் - சென்ற சுமந்திரன்; செய்தது - செய்த செயல்களை; செப்பலுற்றாம் - (இனிச்) சொல்லத் தொடங்கினோம்.

யோசனை என்பது நீட்டல் அளவைப் பெயர். துரிதம் - வேகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before the sun-god took hold of the great eastern mountain,
  2. the lord of Tiru had gone two yojanas to the south;
  3. and now we begin to tell what he did who went off in the swift horse-drawn chariot,
  4. he, with his eyes streaming like waterfalls and his heart wounded and wasting.

What the poem says

By dawn, before the sun has climbed over the eastern mountain, Irāmaṉ has walked two yojanas south. The poet now turns back to Cumantiraṉ, riding home in the fast chariot with tears pouring from his eyes and his heart in pieces.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pariti vāṉavaṉum kīḻpāl paru varai paṟṟāmuṉṉam
tiruviṉ nāyakaṉum teṉpāl yōcaṉai iraṇṭu pōṉāṉ;
aruvi pāy kaṇṇum puṇṇāy aḻikiṉṟa maṉamum tāṉum
turita māṉ tēril pōṉāṉ ceytatu collaluṟṟām.