கம்பராமாயணம் 1973 · அயோத்தியா 5.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மந்திரிமார்; வள்ளல் தேர்கொண்டு வந்தான் என்று தம் சிந்தை உந்த - இராமன் தேர்மீது ஏறித் திரும்பி வந்துவிட்டான் என்று தம் மனம் தூண்ட; மன்னனை - தசரதனை; ஊர்கொண்ட திங்கள் என்ன - பரிவேடத்தாற் சூழப்பெற்ற சந்திரன் போல; சுற்றி -; கார் கொண்ட மேனியானைக் கண்டிலர் - மேகம் போன்ற மேனியுடைய இராமனைக் காணாதவராய்; கண்ணில் -; வற்றா நீர் கொண்ட - வறளாத பெருக்கெடுக்கும் நீரைக் கொண்ட; நெடும் தேர்ப்பாகன் நிலை கண்டு - நெடிய தேரைச் செலுத்தும் சுமந்திரனது நிலைமையைப் பார்த்து; நிலையின் தீர்ந்தார் - தமது நிலைகெட்டழிந்தார்கள்.
ஊர் - ஊர்கோள். சந்திரனைச் சுற்றிய ஒளி வட்டம். பரிவேடம் எனவும் பெறும். உழையர் - அமைச்சர் - “அறிகொன் றறியான் எனினும், உறுதி, உழை இருந்தான் கூறல் கடன்' (குறள்.638) என்பதனுள் அமைச்சனை 'உழை இருந்தான்' எனல் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their minds urging them, 'The generous prince has come back in the chariot,'
- the courtiers surrounding the king like a halo round the moon
- did not see the one with a body dark as cloud; and seeing the state
- of the tall chariot's driver, his eyes running with tears that would not dry, they fell apart.
What the poem says
The king's ministers, ringed around him like a halo around the moon, hear the chariot and hope that Irāmaṉ has come back. But they do not see the dark prince, only the charioteer with tears streaming from his eyes, and they collapse in despair. The word used for the ministers means 'those close at hand', as in a Tirukkuṟaḷ couplet on a minister's duty to give sound advice.