கம்பராமாயணம் 1974 · அயோத்தியா 5.57

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இரதம் வந்துற்றது ' என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும் ,
'வரதன் வந்துற்றான் ' என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான் ;
புரை தபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி ,
விரத மாதவனைக் கண்டான் , 'வீரன் வந்தானோ ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

“இரதம் வந்து உற்றது” என்று - (காடு சென்று தேர் வந்து சேர்ந்தது என்று; ஆங்கு யாவரும் இயம்பலோடும் - அங்குள்ள அனைவரும் சொல்லியவுடன்; மன்னனும் - தசரதனும்; “வரதன் வந்துற்றான்' என்ன - இராமன் வந்து சேர்ந்தான் என்று கருதி; மயக்கம் தீர்ந்தான் - மன மயக்கம் நீங்கினவனாய்; புரைதபு கமல நாட்டம் - குற்றம் அற்ற தாமரை மலர்போலும் கண்கள்; “பொருக்” என - சடக்கென; விழித்து நோக்கி - திறந்து பார்த்து; விரத மாதவனைக் கண்டான் - நோன்பு மேற்கொண்ட சிறந்த வசிட்ட முனிவனைக் கண்டு; “வீரன் வந்தனனோ? - இராமன் திரும்பி வந்தானோ; என்றான் -

'பொருக்' விரைவுக் குறிப்பு மொழி. வரதன் - இராமன்; வேண்டுவார் வேண்டுவன தருபவன் என்னும் பொருளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as everyone there said, 'The chariot has come,'
  2. the king, thinking 'The giver of boons has come,' came out of his swoon;
  3. he opened his flawless lotus eyes with a start and looked,
  4. saw the great sage of holy vows, and said, 'Has the hero come?'

What the poem says

Tacarataṉ has been lying unconscious. When he hears people say that the chariot is back, he thinks Irāmaṉ has returned and comes round at once. His eyes snap open, he sees Vacittaṉ, and asks, 'Has the hero come back?' Note that he cannot bring himself to say the word 'forest'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iratam vantu uṟṟatu' eṉṟu āṅku yāvarum iyampalōṭum,
'varataṉ vantuṟṟāṉ' eṉṉa maṉṉaṉum mayakkam tīrntāṉ;
puraitapu kamala nāṭṭam porukkeṉa viḻittu nōkki,
virata mā tavaṉaik kaṇṭāṉ, 'vīraṉ vantaṉaṉō' eṉṟāṉ.