கம்பராமாயணம் 1975 · அயோத்தியா 5.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முனிவன் - வசிட்ட முனிவன்; “இல்லை” என்று உரைக்கலாற்றான் - (இராமன்) வரவில்லை என்று சொல்ல முடியாதவனாய்; ஏங்கினன் நின்றான் - மனம் வருந்திச் சும்மா இருந்தான்; வல்லவன் முகமே - தவத்தால் வலிய வசிட்டனது முகந்தானே; “நம்பி வந்திலன்' - இராமன் மீள வரவில்லை; என்னும் மாற்றம் சொல்லலும் - என்கின்ற வார்த்தையைத் தசரதனுக்குக் கூறுதலும்; அரசன் சோர்ந்தான் - தசரதன் தளர்ந்தான்; துயர் உறு முனிவன் - துன்பமுற்ற முனிவன்; “நான் இவ் அல்லல் காண்கில்லேன்' என்னா - நான் இந்தத் துன்பத்தைக் காணும் ஆற்றல் இல்லேன் என்று சொல்லி; ஆங்கு நின்று - அவ்விடத்திலிருந்து; அகலப் போனான் - அகன்று அப்பால் சென்றான்.
உள்ளக் கருத்தை முகம் தெரிவிக்குமாதலின், முனிவன் முகத்தைக் கண்டு அவன் அகக்கருத்தைத் தயரதன் அறிந்து சோர்ந்தானாம். “அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்' என்பது (குறள். 706.) இங்கே நோக்கத் தக்கது. ஆற்றல் சான்ற சிறந்த தவமுனிவனாகிய வசிட்டன் பற்றும் பாசமும் அற்ற துறவி. அவனாலேயே தசரதனின் துன்பம் காண இயலவில்லை என்றால், தசரதனது துன்பத்தின் அளவு மிகுதியும், அவன் இராமன்பால் கொண்டிருந்த அன்பின் மிகுதியும் புலப்படும். யாரை நோக்கி வினாவினானோ அவன் முகத்தையே கண்டான் என்றலே பொருந்தும். ஆதலின் வல்லவன் என்பது சுமந்திரனை அன்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Unable to say 'No,' the sage stood there in anguish;
- but the face of that master spoke the words,
- 'The prince has not come,' and the king sank down; and the grieving sage,
- saying, 'I cannot look upon this suffering,' went away from there.
What the poem says
Vacittaṉ cannot bring himself to say no, but his face says it for him, and the king collapses. Like a crystal that takes on the colour of what is next to it, the face shows what is in the heart, as a Tirukkuṟaḷ couplet puts it. The sage, a renunciant free of all attachment, cannot bear to watch the king's agony and leaves. That even he cannot bear it shows how deep Tacarataṉ's grief and love are.