கம்பராமாயணம் 1976 · அயோத்தியா 5.59

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நாயகன் - தசரதன்; பின்னும் - திரும்ப; தன் தேர்ப்பாகனை நோக்கி - தன்னுடைய சாரதியாகிய சுமந்திரனைப் பார்த்து; “நம்பி சேயனோ அணியனோ?” என்று உரைத்தலும் - இராமன் தொலைவில் உள்ளானோ அண்மையில் உள்ளானோ என்று கேட்க; தேர் வலானும் - சுமந்திரனும்; தானும் - இராமனும்; தம்பியும் - இலக்குவனும்; மிதிலைப் பொன்னும் - மைதிலியுமாக; வேய் உயர் கானம் - மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ள காட்டுக்கு; போயினன் - சென்றான்:' என்றான் -; என்ற போழ்தத்தே - என்று அவன் கூறிய அப்பொழுதே; ஆவி போனான் - (தசரதன்) உயிர் நீத்தான்.

தயரதன் தன் வாயால் காடு என்ற வார்த்தையைக் கூறுதற்கும் ஒவ்வாது அஞ்சி, முன்பும் 'வீரன் வந்தனனோ' என்றதும், இங்கும் 'சேயனோ அணியனோ' என்றதும் அறிந்து உணரத் தக்கன. முன்பும் 'மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற' என்று இரண்டாவது வரத்தை மற்றையது என்று தசரதன் குறித்ததை இங்கே நினைவுகூரலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then the king looked again at his charioteer and asked,
  2. 'Is the prince far off, or near?' And the master of the chariot said,
  3. 'He has gone into the forest of tall bamboo, himself, his brother
  4. and the golden one of Mitilai'; and the moment he said it, the king's life left him.

What the poem says

Tacarataṉ turns to Cumantiraṉ and asks only whether Irāmaṉ is far or near; he still cannot say 'forest'. Earlier, when granting Kaikēyi's boons, he had likewise refused to name the exile. Cumantiraṉ replies that Irāmaṉ, his brother and Cītai, the golden lady of Mitilai, have gone into the bamboo forest. The instant he says it, the king dies.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāyakaṉ piṉṉum taṉ tērp pākaṉai nōkki 'nampi
cēyaṉō? aṇiyaṉō?' eṉṟu uraittalum, tēr valāṉum,
'vēy uyar kāṉam tāṉum tampiyum mitilaip poṉṉum
pōyiṉaṉ' eṉṟāṉ; eṉṟa pōḻtattē āvi pōṉāṉ.