கம்பராமாயணம் 1977 · அயோத்தியா 5.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இந்திரன் முதல்வராய கடவுளர் யாரும் ஈண்டி - இந்திரன் முதலாகிய தேவர்கள் எல்லாரும் வந்து; சந்திரன் அனையது - சந்திரனை ஒத்ததாகிய; ஓர் மானத்தின் தலையில் தாங்கி - ஒரு விமானத்திடத்தில் சுமந்து; “எந்தை தந்தை வந்தனன்” என மனம் களித்து - எம்முடைய தலைவனாகிய இராமனின் தந்தையாய தசரதன் வந்துவிட்டான்' என்று மனமகிழ்ச்சி அடைந்து; வள்ளல் - தசரதனை; உந்தியான் உலகின் - திருவுந்தித் தாமரையனாகிய பிரமதேவனது சத்திய லோகத்தின்; உம்பர் - மேலே உள்ள; மீள்கலா உலகத்து - தன்னை அடைந்தவர் திரும்ப வாராத உலகத்தில்; உய்த்தார் - கொண்டு சேர்த்தார்கள்.
இராமபிரான் திருமாலின் அவதாரம் ஆதலின், அவனுடைய தந்தைக்குப் பரமபதம் கிடைத்தல் உறுதி என்பதனால் சத்திய லோகத்துக்கு மேற்பட்ட விஷ்ணுலோகத்தில் சேர்ந்தார்கள் என்று கம்பர் கூறினார். “மீள்கலா உலகம்” என்பது வினைவழிப் பிறந்திறந்து நலிவெய்தித் திரும்பி வராத உலகம் என்பதே பொருள். பரமபதத்தில் நித்தியசூரிகளாய் உள்ளாரும் இறைவனது சங்கற்பத்தால் பிறவாது வந்து போதல் உளதாகலின் அதுபற்றி மீண்டும் மீட்சிப் படலத்து இராமனைக் காண தசரதன் வந்து போதற்குத் தடையில்லை என அறிக. அவ்வாறில்லாக்கால் ஆழ்வார்கள், ஆசார்கள் இரு அவதாரத்துக்குப் பொருளின்றாய முடியும். ஆதலின், ஆங்கு - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The gods with Intiraṉ at their head all gathered there,
- and bearing him on a celestial car like the moon,
- rejoicing in their hearts, 'The father of our lord has come,'
- they carried the generous king to the world of no return, above the world of him of the navel-lotus.
What the poem says
As Tacarataṉ dies, Intiraṉ and the other gods arrive with a moon-white celestial chariot. Delighted that the father of their lord has come, they carry him past Piramaṉ's heaven, the world of the god born from Tirumāl's navel-lotus, up to the world from which no one returns to rebirth. Because he fathered Tirumāl incarnate, he is granted the highest heaven. This does not prevent him from coming back to see Irāmaṉ later in the epic, since the god can permit such visits.