கம்பராமாயணம் 1979 · அயோத்தியா 5.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இருந்த அந்தணனோடு - உந்தித் தாமரையில் இருந்த பிரமனோடு; எல்லாம் ஈன்றவன் தன்னை ஈன - சர்வலோகங்களையும் தந்தருளிய பரமாத்மாவைப் பெற்றெடுக்க; பெருந்தவம் செய்த நங்கை - பெரிய தவத்தைச் செய்த பெருமாட்டியாகிய கோசலை; கணவனில் பிரிந்து - தயரதனாகிய நாயகனைப் பிரிந்து; தெய்வ மருந்து இழந்தவரின் - தேவாமிர்தத்தை இழந்தவர்களைப் போல; விம்மி - துடித்து; மணி பிரி அரவின் மாழ்கி - (தனக்குக் கண்ணாகிய) மாணிக்கத்தை இழந்த பாம்பைப் போல மயங்கி, அருந்துணை இழந்த - அரிய ஆண்பறவையாகிய துணையை இழந்த; அன்றில் பெடை என - அன்றிற் பெண்பறவை போல; அரற்றலுற்றாள் - புலம்பத்தொடங்கினாள்.
பரமனுக்கே தாய்தான்; என்றாலும், கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்ற வகையில் கோசலை அவலம் கொடியது. கோசலையின் துயரத்தைப் பல உவமைகளால் விளக்கினார். தேவர்க்கு நிலைபேறு தருவது அமுதம்; பேரரசி என்ற தகுதிப்பாடு தயரதனால் பெற்றவள் கோசலை. பாம்பு முதிர்ச்சிக் காலத்தில் மணியை உமிழ்ந்து வெளியே வைத்து இரைதேடும் - மணி இழந்தால் துடித்து உயிர் நீக்கும் என்பது இலக்கியங்களில் வரும் செய்தி ஆகும். அன்றில் இணைபிரியாது வாழும் பறவை. இதனால் இவை கணவனை இழந்து துயர் அடையும் கோசலைக்கு உவமை ஆயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lady who did great penance to bear the one who bore all things, Brahmā seated with him,
- parted now from her husband, sobbed like those who have lost
- the divine nectar, swooned like a serpent parted from its gem,
- and began to wail like a female aṉṟil bird that has lost its precious mate.
What the poem says
Kōcalai is praised as the woman whose great austerities earned her the right to give birth to the Supreme Being, who brought forth all the worlds together with Brahmā, the creator seated on the lotus of his navel. Yet even the mother of God is not spared a widow's grief.
Three comparisons build her sorrow: the gods robbed of the nectar that keeps them deathless, as she is robbed of the husband who made her queen; the serpent said in poetry to lay aside its jewel while it feeds and to die of anguish if it loses it; and the aṉṟil, a bird believed never to live apart from its mate.