கம்பராமாயணம் 1987 · அயோத்தியா 5.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அத்தேவியர்) துஞ்சினானை - இறந்தவனை; தம் உயிரின் துணையை - தம் உயிர்க்குத் துணையாக இருந்த நாயகனை; கண்டார் - பார்த்தார்கள்; துணுக்கத்தால் - வெருவுதலால்; நஞ்சு நுகர்ந்தார் என - விடம் உண்டவர் போல; உடலம் நடுங்காநின்றார் - உடல் நடுக்கமெடுக்க இருந்தார்கள்; என்றாலும் - இப்படிப்பட்ட துக்கம் வந்த போதிலும்; அஞ்சி அழுங்கி விழுந்திலர் - பயந்து மனம் துயரம் மிக்கு விழவில்லை; வஞ்சம் இல்லா மனத்தானை - வஞ்சனையற்ற மனம் உடைய தசரதனை; வானில் தொடர்வான் மனம் வலித்தார் - இறந்து பின்பற்றிச் சென்று வானுலகில் அடைய மனத்தின்கண் உறுதி மேற்கொண்டார்; அன்பின் தறுகண் பிறிது உண்டோ? - அன்பைக் காட்டிலும் வலியது வேறு உண்டோ? (இல்லை என்றபடி).
வானுலகில் தயரதனை அடைய உறுதி பூண்டபடியால் இங்கே மனம் சோர்ந்து போகவில்லையே தவிரத் துக்கம் இல்லை என்பது பொருள் இல்லை - இறக்கத் துணிந்தனர் என்பதாம். 'ஆல்' அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They saw him lying dead, the companion of their lives, and in their shock
- their bodies trembled as if they had drunk poison; and yet
- they did not fall down in fear and anguish. Is there any courage other than love's?
- They set their minds on following the guileless king into heaven.
What the poem says
The queens tremble at the sight of their dead husband as if poisoned, yet they do not collapse. The reason is not that they feel less grief but that they have already resolved to follow Tacarataṉ, a man without deceit, to the world above, that is, to die on his funeral pyre.
The poet asks whether there is any fortitude greater than that which love gives, implying there is none.