கம்பராமாயணம் 1988 · அயோத்தியா 5.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அளம் கொள் அளக்கர் இரும்பரப்பில் - உப்பளத்தைக் கொண்ட கடலாற் சூழப்பெற்ற நிலவுலகில்; அண்டர் உலகில் - தேவர் உலகில்; அப்புறத்தில் - வேறு இடங்களில்; விளங்கும் மாதர் - கற்புடன் விளங்குகின்ற மாதர்கள்; “இவரின் கற்பினார் யாரோ!” என - இவர்களைக் காட்டிலும் கற்பிற் சிறந்தவர் யார் உளரோ என்னும்படி; நின்றார் - (அத்தேவிமார்) நின்றார்கள்; களங்கம் நீத்த மதிமுகத்தார் - களங்கம் இல்லாத மதிபோன்ற முகத்தை உடையவர்களாய அத்தேவிமார்; கான வெள்ளம் கால் கோப்ப - காட்டு நீர்ப் பெருக்கு தன் அடியைச் சூழ உள்ள; துளங்கல் இல்லாத் தனிக் குன்றில் - சிறிதும் அசைந்து கொடுக்காத பெரிய மலையில், தொக்க மயிலின் - சேர்ந்து இருந்த மயில் கூட்டத்தைப் போல; சூழ்ந்திருந்தார் - அவ் அரண்மனையில் திரண்டிருந்தனர்.
அடியில் நீர் சூழ மலையில் மயில் திரண்டது போல் என உவமை காண்க. கண்ணீர் வெள்ளம் சூழ அரண்மனையில் தேவிமார் என உவமைக்கேற்பக் கொள்ளலாம். இனி கான வெள்ளம் என்பதற்கு அவரது அழுகுரலோசையாகிய வெள்ளம் என்பாரும் உளர்; பொருந்துமேற் கொள்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the wide world girdled by the salt-pan sea, in the world of the gods, and beyond,
- who among the women renowned for chastity is chaster than these? So they stood,
- those women with faces like the spotless moon, and, like peacocks gathered
- on a lone, unshaken hill whose foot is ringed by a forest flood, they sat around him.
What the poem says
The queens stand so steadfast in their devotion that one might ask whether any woman on earth, in heaven or anywhere else is more chaste than they. Their faces are like the moon without its dark mark.
They gather in the palace like a flock of peacocks on an unmoving hill whose base is surrounded by floodwater. The flood can be taken as the tears streaming around them, or, as some read the word, the flood of their wailing voices.