கம்பராமாயணம் 1990 · அயோத்தியா 5.73
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாதரார்கள் அறுபதினாயிரரும் - (தசரதன்) மனைவியராய அறுபதினாயிரம் தேவிமார்களும்; உள்ளம் வலித்து இருப்ப - உடன் கட்டை ஏறுவது என்று மனத்தில் உறுதி செய்துகொண்டு இருக்க; கோது இல் குணத்துக் கோசலையும் இளையமாதும் குழைந்து ஏங்க - குற்றமற்ற குணத்தை உடைய கோசலாதேவியும், சுமித்திராதேவியும் மனம் இளகி வாட; (இந்நிலையில்) சோதி மணித்தேர்ச் சுமந்திரன் சென்று - ஒளியை உடைய மணிகள் கட்டப்பட்ட தேரை உடைய சுமந்திரன் போய்; அரசன் தன்மை சொல - தயரதன் இறப்பைத் தெரிவிக்க; வந்த வேத முனிவன் - அங்கே வந்த வசிட்ட முனிவன்; விதி செய்த வினையை நோக்கி - ஊழ்வினை செய்த செயலை உள்ளத்தாலும் கண்ணாலும் நோக்கி; விம்முவான் - வருந்துவான் ஆனான்.
அரசன் துடிக்கும் காட்சியைக் காணச் சகியாமல் அப்பால் சென்ற வசிட்டன் சுமந்திரனால் செய்தி அறிந்து வந்து வருந்தினன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While all sixty thousand wives stood firm in their resolve,
- and Kōcalai of flawless virtue and the younger queen pined and sobbed,
- Cumantiraṉ of the bright jewelled chariot went and told how it was with the king; and the Vedic sage
- who came looked upon the work that fate had done, and sobbed.
What the poem says
The sixty thousand queens have resolved to die with the king, while Kōcalai and Cumittirai are overwhelmed with grief. Cumantiraṉ, the king's charioteer and minister, goes to inform the family priest Vacittaṉ (Vasiṣṭha), who had withdrawn earlier because he could not bear to watch the king's agony.
The sage arrives, sees what destiny has brought about, and is himself shaken with sobs.