கம்பராமாயணம் 1991 · அயோத்தியா 5.74

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வந்த முனியும் வரம் கொடுத்து , மகனை நீத்த , வன்கண்மை
எந்தை தீர்ந்தான் , என உள்ளத்து எண்ணி எண்ணி , இரங்குவான்
உந்து கடலில் பெருங்கலம் ஒன்று உடையாநிற்பத் தனி நாய்கன்
நைந்து நீங்கச் செயல் ஓரா மீகாமனைப் போல் நைவுற்றான் .

பொருள் · Meaning in Tamil

வந்த முனிவன் - அங்கே வந்த வசிட்டன்; வரம் கொடுத்து மகனை நீத்த வன்கண்மை - வரத்தைக் கொடுத்து மகனைப் பிரிந்த கொடுமையை; எந்தை - தயரதன்; தீர்ந்தான் - நீங்கினான்; என - என்று; உள்ளத்து - மனத்தில்; எண்ணி எண்ணி இரங்குவான் - நினைத்து நினைத்து மனம் தளர்பவனாய்; உந்து கடலில் - அலை மோதும் கடலில்; பெருங்கலம் ஒன்று உடையாநிற்க - பெரிய கப்பல் ஒன்று உடைந்துவிட; தனி நாய்கன் - தனிப்பட்ட கப்பல் தலைவன் இறந்துபட; செயல் ஓரா மீகாமனைப் போல் - தான் செய்வது இன்னது எனத் தெரியாமல் திகைத்துத் தடுமாறுகின்ற மாலுமியைப் போல; நைவுற்றான் - வருந்தினான்.

மன்னவன் உடல் மரக்கலம் - மன்னவன் மரக்கலத் தலைவன் - வசிட்டன் மாலுமி என உவமை கொள்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sage who had come thought over and over, "Our lord has escaped the cruelty
  2. of granting the boon and sending away his son," and grieving,
  3. like a helmsman who cannot tell what to do when a great ship breaks apart
  4. on the surging sea and its sole master perishes, he was stricken.

What the poem says

Vacittaṉ reflects that the king has passed beyond the harshness of having granted Kaikēyi's boons and banished his own son. Death has released him from that pain.

The sage himself is like a helmsman whose great ship has broken up in a stormy sea and whose master has drowned, leaving him at a loss. The king's body is the ship, the king its master, and Vacittaṉ the steersman left to guide the kingdom.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vanta muṉivaṉ varam koṭuttu, makaṉai nītta, vaṉkaṇmai
entai tīrntāṉ, eṉa uḷḷattu eṇṇi eṇṇi, iraṅkuvāṉ
untu kaṭalil peruṅ kalam oṉṟu uṭaiyā niṟkat taṉi nāykaṉ
naintu nīṅkac ceyal ōrā mīkāmaṉaippōl nalivuṟṟāṉ.