கம்பராமாயணம் 1993 · அயோத்தியா 5.76

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேவிமாரை 'இவற்கு உரிமை செய்யும் நாளில் செம் தீயில்
ஆவி நீத்திர் ' என நீக்கி , அரிவைமார்கள் இருவரையும்
தா இல் கோயில் தலை இருத்தித் தண் தார்ப் 'பரதற் கொண்டு அணைக ' என்று
ஏவினான் , மன்னவன் ஆணை எழுதும் முடங்கல் எடுத்தோரை .

பொருள் · Meaning in Tamil

தேவிமாரை - அறுபதினாயிரம் தேவியரையும்; “இவற்கு உரிமை செய்யும் நாளில் - இவனுக்கு இறுதிக்கடன் செய்யும் நாளில்; செந்தீயின் ஆவி நீத்திர்” - நெருப்பில் உடன்கட்டை ஏறி உயிர்விடுவீராக; என நீக்கி - என்று போகச்செய்து; அரிவைமார்கள் இருவரையும் - பட்டத்தரசியர் இருவரையும்; தாவில் கோயில் தலை இருத்தி - குற்றமற்ற அரண்மனையில் இருக்குமாறு செய்து; மன்னவன் ஆணை எழுதும் முடங்கல் கொடுத்து அவரை - அரசன் ஆணையை எழுதும் ஓலையைக் கொடுத்துத் தூதுவரை; “தண்தார்ப் பரதன் கொண்டு அணைக” என்று ஏவினான் - குளிர்ந்த மாலை அணிந்த பரதனை அழைத்துக்கொண்டு வருக என்று சொல்லி அனுப்பினான்.

அவரை என்பது பண்டறி சுட்டு. ஓலை செல்லற்குரிய தூதுவர் என்பது உணரப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To the queens he said, "On the day his last rites are performed, in the red fire
  2. you may give up your lives," and so sent them away; and the two royal ladies
  3. he settled in the flawless palace; then, "Bring Paratan of the cool garland," he said,
  4. and sent them off, handing them a letter written under the king's seal.

What the poem says

Vacittaṉ takes charge. He sends the sixty thousand queens away, telling them they may follow the king into the funeral fire on the day of his cremation. He has the two senior queens, Kōcalai and Cumittirai, stay in the palace.

He then dispatches messengers with a palm-leaf letter bearing the royal command, telling them to bring Paratan back to Ayōttī. The word them in the last line refers to the messengers, understood from the context as those whose task is to carry such letters.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēvimārai 'ivaṟku urimai ceyyum nāḷil cen tīyiṉ
āvi nīttir ' eṉa nīkki, arivaimārkaḷ iruvaraiyum
tā il kōyiltalai iruttit taṇ tārp 'parataṟ koṇṭu aṇaika ' eṉṟu
ēviṉāṉ, maṉṉavaṉ āṇai eḻutu muṭaṅkal koṭuttu avarai.