கம்பராமாயணம் 1994 · அயோத்தியா 5.77

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1போனார் அவரும் கேகயர் கோன் பொன்மா நகரம் புக வெய்தின்
ஆனா அறிவின் அரும் தவனும் அறம் ஆர் பள்ளியது சேர்ந்தான் ;
'சேனாபதியில் சுமந்திரனே செயற்பாற்கு உரிய செய்க ' என்னா
மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு விளைந்தது இனி நாம் விளம்புவாம் .

பொருள் · Meaning in Tamil

அவரும் - வசிட்டன் அனுப்பிய தூதுவரும், கேகயர் கோன் - கேகயநாட்டரசனது; பொன்மா நகரம் புக எய்த - பொலிவுற்ற பெரிய நகரத்தைப் போய் அடைய; போனார் - போனார்கள்; ஆனா அறிவின் அருந்தவனும் - பேரறிவினனாகிய வசிட்டனும், சேனாபதியின் சுமந்திரனை - சேனாபதியருள் ஒருவனாகிய சுமந்திரனை; “செயற்பாற்கு உரிய செய்க” என்றான் - இப்போது செய்தற்குத் தகுந்த செயல்களைச் செய்து (நாட்டை உன்னிப்பாகக்) கவனித்துக் கொள்க என்று சொல்லி; அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான் - தனது தர்மத்தை நடத்துதற்குப் பொருந்திய தவச்சாலையை அடைந்தான்; மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு விளைந்தது இனி நாம் விளம்புவாம் - முன்பு இராமனோடு சென்ற நகரமாந்தர்களுக்கு நடந்ததை இனி நாம் சொல்லத் தொடங்குகிறோம்.

அரசன் இல்லாக் காலத்து நாட்டில் கலவரமும், குழப்பமும் விளையக் கூடும் ஆதலின், அத்தகைய நேரங்களில் நாட்டைக் கவனிக்கும் பொறுப்பு சேனாதிபதிகளுக்குரியது. ஆகவே, வசிட்டனும் சேனாபதியாகிய சுமந்திரனை அழைத்துச் “செய்ய வேண்டியவற்றைச் செய்க” என்றான். அரசியல் நடந்தவாற்றை இதன்மூலம் அறிந்து மகிழ்கிறோம். மந்திரிமார்கள் பலர் பல துறையிலும் இருப்பர், அவருள் சேனாபதியரும் அமைச்சரே யாவர். சுமந்திரன் என்பது நல்ல மந்திராலோசனையில் உள்ளவன் என்ற பொதுப் பொருளில் மந்திரியர்க்குள்ள சொல்லாகும். சென்ற அரசனுக்கும், வந்து சேர வேண்டிய அரசனுக்கும் இடையில் உள்ள காலத்தில் நாட்டைக் குழப்பத்திலிருந்து மீட்கும் பொறுப்பு சேனாபதியர்க்கு உள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The messengers went off to reach the great golden city of the Kēkaya king;
  2. the sage of unfailing wisdom and rare austerity went back to his hermitage, the abode of dharma,
  3. having told Cumantiraṉ, the commander, "Do what ought to be done."
  4. Now we shall tell what befell the people we spoke of before.

What the poem says

The messengers set off for the capital of the Kēkaya kingdom, where Paratan is staying with his maternal grandfather. Vacittaṉ returns to his hermitage after placing Cumantiraṉ in charge of keeping order. In a kingdom without a king there is a risk of unrest, and the commentary notes that responsibility in such an interval falls to the commanders and ministers.

The poet then turns the story back to the citizens of Ayōttī who had followed Irāmaṉ toward the forest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pōṉār avarum kēkayarkōṉ poṉ mā nakaram puka eyta
āṉā aṟiviṉ arun tavaṉum aṟam ār paḷḷi atu cērntāṉ;
cēṉāpatiyiṉ cumantiraṉai 'ceyaṟpāṟku uriya ceyka ' eṉṟāṉ
mēl nām coṉṉa māntarkku viḷaintatu iṉi nām viḷampuvām.