கம்பராமாயணம் 1997 · அயோத்தியா 5.80

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
' '
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1எட்டுத் திசையும் ஓடுவார் , எழுவார் , விழுவார் , 'இடர்க் கடலுள்
விட்டு நீத்தான் நமை ' என்பார் ; 'வெய்ய வினையின் விளைவு ' என்பார் ;
'ஒட்டிப் படர்ந்த தண்டகம் இவ் உலகத்து உளதன்றோ ? உணர்வைச்
சுட்டுச் சேர்தல் ஆற்றுதுமோ ? தொடர்தும் தேரின் சுவடு ' என்பார் .

பொருள் · Meaning in Tamil

எட்டுத்திசையும் ஓடுவான் எழுவார் - எண்திசைகளிலும் ஓடுவதற்காக எழுந்திருப்பார்; விழுவார் இடர்க்கடலுள் - ஆற்றாமையால் அது செய்யமாட்டாது துன்பக்கடலுள் விழுவார்; “நமை விட்டு நீத்தான்” என்பார் - நம்மை விட்டுவிட்டுப் பிரிந்துபோய்விட்டான் என்று கதறுவார்; “ஐயன் வினை வெய்ய” என்பார் - இராமன் செய்த செயல் கொடியது என்பார்; ஒட்டிப் படர்ந்த தண்டகம் - பொருந்திப் பரவியுள்ள தண்டகவனம்; இவ் உலகத்து உளது அன்றோ? - இந்த உலகத்தில்தான் உள்ளது அல்லவா, உணர்வைச் சுட்டுச் சோர்தல் பழுது அன்றோ? - அறிவைப் பொசுக்கித் தளர்வது குற்றம் அல்லவா; தேரின் சுவடு தொடர்தும் - அவன் சென்ற தேரின் சக்கரம் அழுந்திய வடுவைத் தொடர்ந்து சென்று அடைவோம்; என்பார் -

துக்கத்தால் நகரமாந்தர் துடித்தபடி இதனால் விளங்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They ran toward all eight directions, rose up, fell down; "Into a sea of sorrow
  2. he has cast us off and left us," some said; "Cruel is our lord's deed," said others;
  3. "Is not the Taṇṭakam forest, spreading close, in this very world? To scorch our wits
  4. and give way is wrong, is it not? Let us follow the chariot's tracks," said others.

What the poem says

The abandoned citizens are frantic. Some start up to run in every direction and collapse in despair; some lament that Irāmaṉ has left them in an ocean of grief; some even call his act cruel.

Others pull themselves together: the Taṇṭaka forest, where he is headed, is somewhere on this earth, so instead of losing their senses in grief they should follow the wheel marks of his chariot and find him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṭṭut ticaiyum ōṭuvār, eḻuvār, viḻuvār, 'iṭark kaṭaluḷ
viṭṭu nīttāṉ namai ' eṉpār; 'veyya aiyaṉ viṉai ' eṉpār;
'oṭṭip paṭarnta taṇṭakam iv ulakattu uḷatu aṉṟō? uṇarvaic
cuṭṭuc cōrtal paḻutu aṉṟō? toṭarntum tēriṉ cuvaṭu ' eṉpār.