கம்பராமாயணம் 1998 · அயோத்தியா 5.81

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேரின் சுவடு நோக்குவார் , திரு மா நகரின் மிசைத் திரிய
ஊரும் திகிரிக் குறி ஒற்றி உவந்தார் எல்லாம் உயிர் வந்தார் ,
'ஆரும் அஞ்சல் ! ஐயன் போய் அயோத்தி அடைந்தான் ' என அசனிக்
காரும் கடலும் ஒரு வழி கொண்டு ஆர்த்த என்னக் கடிது ஆர்த்தார் .

பொருள் · Meaning in Tamil

எல்லாம் - எல்லாரும்; தேரின் சுவடு நோக்குவார் - தேரின் சக்கரத்தழும்பைப் பூமியில் பார்த்து; திருமாநகரின் மிசைத் திரிய ஊரும் திகிரிக் குறி ஒற்றி உணர்ந்தார் - அழகிய பெரிய அயோத்தி நகரின் மேல் திரும்பச் சுழன்று செல்லும் சக்கர அடையாளத்தைப் பொருத்திச் சார்ந்து அறிந்து; உயிர் வந்தார் - உயிர் வரப்பெற்று; “ஆரும் அஞ்சல் - யாரும் பயப்படாதீர்கள்; ஐயன் அயோத்தி போய் அடைந்தான்” - இராமன் அயோத்திக்குப் போய்ச் சேர்ந்துவிட்டான்; என - என்று; அசனிக் காரும் - இடி உடைய மேகமும்; கடலும் -; ஒரு வழிக் கொண்டு - ஓரிடத்தில் சேர்ந்து; ஆர்த்த என்ன - ஒலித்தன என்னும்படி, கடிது - விரைவாக; ஆர்த்தார் - மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தார்கள்.

ஆர்ப்புக்கு மேகமும் கடலும் சேர்ந்த ஒலி உவமை. சுமந்திரன் சென்ற தேர்ச் சுவட்டை இராமன் திரும்பச் சென்றதாகக் கருதி மயங்கினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking at the chariot's tracks, all of them traced the wheel marks
  2. turning back toward the great and splendid city, understood, and their life returned;
  3. "Let no one fear! Our lord has gone back and reached Ayōttī!" they cried, and as if the thunder-
  4. laden cloud and the sea had joined in one place and roared, they shouted out at once.

What the poem says

Examining the ground, the citizens find the chariot tracks heading back toward Ayōttī and conclude that Irāmaṉ has returned to the city. Their spirits revive and they raise a great cheer, as loud as thunderclouds and ocean roaring together.

In fact the tracks were made by Cumantiraṉ, who had driven the empty chariot back to the capital as a decoy after leaving Irāmaṉ. The people are deceived by it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēriṉ cuvaṭu nōkkuvār, tiru mā nakariṉ micait tiriya
ūrum tikirik kuṟi oṟṟi uṇarntār ellām uyir vantār,
'ārum añcal! aiyaṉ pōy ayōtti aṭaintāṉ ' eṉa acaṉik
kārum kaṭalum oruvaḻik koṇṭu ārtta eṉṉak kaṭitu ārttār.