கம்பராமாயணம் 1999 · அயோத்தியா 5.82

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மான அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின் வழி
ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து
போன பொழுதில் புகுந்த உயிர் பொறுத்தார் ஒத்தார் பொரு அரிய
வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையார் .

பொருள் · Meaning in Tamil

ஆண்டையார் - அங்கேயிருந்த அந்நகரத்தவர்; பொரு அரிய வேனில் மதனை மதன் அழித்தான் - ஒப்பற்ற வசந்தகாலத்துக்குரிய மன்மதனை அழகால் செருக்கழித்த இராமன்; மீண்டான் என்ன - அயோத்திக்குத் திரும்பிவிட்டான் என்று கருதி; மான அரவின் - சீற்றம் பொருந்திய பாம்பின்; வாய்த் தீய வளை வான்தொளை வாள் எயிற்றின்வழி ஆன கடுவுக்கு - வாயில் உள்ள தீய வளைந்த சிறந்த விடப்பல்லின் ஆக வரும் விடத்துக்கு; அரு மருந்தா - அரிய மருந்தாக; அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து - உண்ணக்கூடிய சாவா மருந்தைப் பெற்று உயிர் பிழைத்து; போன பொழுதில் - வெளியே போன உடனேயே; புகுந்த உயிர் - திரும்ப உள்ளே வந்து புகுந்த உயிரை; பொருந்தார் ஒத்தார் - தாங்கியவர்களைப் போன்றார்கள்.

பாம்பினாற் கடியுண்ட உடனே வெளியேறிய உயிர் அமுதம் பெற்று உய்ந்து மீண்டும் உள்ளே புகுந்தாற் போல முதல்நாள் இரவில் சோர்ந்திருந்த நகரினர் காலையே தேரின் சுவடு கண்டு அயோத்தி நகர் நோக்கி மகிழ்ந்தபடி உள்ளது என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like those who, bitten through the curved, hollow, gleaming fang
  2. of an angry serpent's venomous mouth, gained nectar to drink as a rare cure for the poison
  3. and were saved, so that the life that had just left them came back in, were
  4. the people there, believing that he who humbled the peerless spring-god of love had returned.

What the poem says

Believing that Irāmaṉ, whose beauty outshines even Maṉmataṉ, the god of love associated with spring, has gone back to Ayōttī, the citizens feel as though they have been brought back from death.

They are compared to people bitten by a cobra whose life has already slipped away, but who are given the nectar of immortality as an antidote and feel their life rush back into them. The despair of the night gives way to joy at dawn.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṉa araviṉ vāyt tīya vaḷai vāṉ toḷai vāḷ eyiṟṟiṉvaḻi
āṉa kaṭuvukku aru maruntā aruntum amutam peṟṟu uyntu
pōṉa poḻutil pukunta uyir poruntār ottār poru ariya
vēṉil mataṉai mataṉ aḻittāṉ mīṇṭāṉ eṉṉa āṇṭaiyār.