கம்பராமாயணம் 2000 · அயோத்தியா 5.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆறு செல்லச் செல்ல - வழி நடந்து போகப் போக; தேர் ஆழி கண்டார் - தேர்ச் சக்கரத்தை (சுவட்டைப்) பார்த்து; அயற்பால வேறு சென்ற நெறி காணார் - பக்கத்தில் வேறாகச் சென்ற வழிகள் (சுவடுகள்) எதுவும் காணாது; விம்மாநின்ற - மேலும்மேலும் தளும்புகின்ற; உவகையராய் - மகிழ்ச்சியோடு; மாறி உலகம் வகுத்த நாள் - பிரளயம் நீங்கி மீண்டும் படைப்பு நிகழ்ந்த காலத்தில்; வரம்பு கடந்து மண்முழுதும் ஏறி - எல்லை கடந்து பூமி முழுவதும் மூடி மேல் சென்று (பிறகு); ஒடுங்கும் எறிகடல் போல் - தன் எல்லைக்குள் ஒடுங்கி அடங்குகின்ற அலைவீசும் கடலைப் போல; எயில் மாநகரம் எய்தினார் - மதிலாற் சூழப் பெற்ற அயோத்தி என்னும் பெரிய நகரத்தை அடைந்தார்கள்.
பெருந்திரளாகக் காடு சென்று மீண்டும் நகர் திரும்பிய மக்கள் வெள்ளத்துக்கு “ஏறி ஒடுங்கி அடங்கும் கடல்” உவமையாம். உவமையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As they went along the road they saw the chariot wheel marks, and saw
- no other track turning off to either side; swelling with joy,
- like the surging sea that, on the day the world was made anew, overran its bounds
- and covered all the earth and then drew back, they reached the great walled city.
What the poem says
Following the tracks all the way and finding no trail branching off, the crowd grows ever more confident and happy, and streams back into walled Ayōttī.
The great multitude that had poured out of the city into the forest and now pours back in is compared to the ocean at the end of a cosmic age, which floods the whole earth and then, when the world is created again, withdraws within its shores.