கம்பராமாயணம் 2002 · அயோத்தியா 5.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(மீண்ட நகரினர்) மன்னற்கு அல்லார் - (நகரில் இருந்து) இறந்துபோன தயரதனுக்கும் உதவாமல்; வனம் போன மைந்தற்கு அல்லார் - காடு சென்ற இராமனுடன் கூடச்சென்று அவனுக்கும் உதவாமல்; வாங்க அரிய - நீக்க முடியாத; இன்னல் சிறையின் இடைப்பட்டார் - துன்பமாகிய சிறையிலே அகப்பட்டுத் தவிப்பாராய்; இருந்தார் -; நின்ற அருந்தவனும் - அவர்களிடையே இருந்த வசிட்டனும்; “யான் -; உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது” என்று - நினைத்தற்கும் அரிய பழி வந்து சேரும் என்று கருதி அல்லவா நகரில் தங்கியது என்று கூறி; பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து - சொல்லுதற்கு முடியாத பல சமாதானங்களையும் சொல்லி; பதைப்பை நீக்கினான் - அவர்கள் துடிப்பைப் போக்கினான்.
“நகரில் தங்கியது” என்றும், “வனம் போகாது ஒழிந்தது” என்றும், “இராமன் காடு செல்வதைத் தடுக்காமல் ஒழிந்தது” என்றும் பலவாறு பொருள் கொள்ளக்கிடக்கும். எதைச் செய்தாலும் பழியாகும் ஆதலின் அவை அனைத்தும் பொருந்திய உரைகளே.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Of no use to the king, of no use to the son who went to the forest, caught
- in a prison of sorrow from which there was no release, they stayed; and the great ascetic standing there,
- saying, "Was it not for fear of unthinkable blame that I held back?"
- and speaking of many ways hard to recount, eased their anguish.
What the poem says
The returned citizens feel trapped: they were not at the dying king's side, and they did not manage to stay with Irāmaṉ in the forest. Vacittaṉ consoles them, pointing out that he too stayed behind for fear of an unthinkable blame, and offering many words of comfort.
What Vacittaṉ held back from can be read several ways: staying in the city, not going to the forest, or not preventing Irāmaṉ's departure. Since any course would have drawn blame, all these readings fit.