கம்பராமாயணம் 2003 · அயோத்தியா 5.86
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முனி பணியால் - வசிட்டன் கட்டளையால்; வெள்ளத்து இடைவாழ் வட அனலை அஞ்சி - கடல்நீர்ப் பெருக்கின் இடையே தங்கியுள்ள வடவாக்கினிக்குப் பயந்து; வேலை கடவாத - தன் கரையைக் கடந்து செல்லாத; பள்ளக் கடலின் - ஆழமான கடல் போல; பையுள் நகரம் வைகிட - துன்பமுடைய நகரமாந்தர் ஆற்றித் தங்கியிருக்க; மேல் - அடுத்து; வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால் - வள்ளன்மை உடைய தயரதன் ஆணை என்கின்ற தேவர்கள் செய்த தவப்பயனால்; வயங்கு இருளின் நள்ளில் - விளங்கும் நடு இரவில்; போன - காடு சென்ற; வரி சிலைக்கை நம்பி - கட்டமைந்த வில்லை உடைய இராமனது; செய்கை - செயலை; நடத்துவாம் - சொல்லுவோம்.
தசரதன் பணியாயினும் அது வானோர் தவமே ஆகும். “கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்பக் கோல் துறந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்து” என்பதும் (1313) காண்க. வடவை - பெண்குதிரை முகம் உடையதாய்க் கடல் நடுவில் இருந்து கடல் நீரைக் கட்டுப்படுத்தும் நெருப்பு. வசிட்டன் வடவைக்கனல் - கடல் நகரமாந்தர் அடங்கல் - அமைதி அடைதல் என உவமை காண்க. வேலை - கரை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the deep sea that, fearing the submarine fire living amid its waters, does not overstep its shore,
- the grieving city stayed calm at the sage's bidding; next,
- by the austerities of the gods, which took the form of his generous father's command, we shall tell the deeds
- of the hero with the banded bow who went away in the heart of the shining night.
What the poem says
This verse closes the chapter on the oil vat. The citizens, held in check by Vacittaṉ's command, stay quietly in the city like the ocean, which is said to keep within its shores out of fear of the mare-headed fire that lives beneath its waters. The sage is that fire, the people the sea.
The poet now returns to Irāmaṉ, who left by night. His exile, though ordered by his father, is really the fruit of the gods' penance, since it sets him on the path to destroy Irāvaṇaṉ and free the gods from their suffering.