கம்பராமாயணம் 2004 · அயோத்தியா 6.1

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மையோ - (கண்ணுக்கு இடக்கூட்டிய) மையோ; மரகதமோ - பச்சைநிற ஒளிக்கல்லாகிய மரகதமோ; மறிகடலோ - (கரையின்கண் அலைகளால்) மறிக்கின்ற கடலோ; மழை முகிலோ - பெய்யும் கார் மேகமோ; ஐயோ - (உவமை சொல்லமாட்டாத நிலையாகிய) ஐயோ! வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் இவன்? - தன் உருவம் என்று சொல்லப்படுவதாகிய ஒப்பற்ற அழியாத அழகினை உடையன் இந்த இராமன்; வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறைய - சூரியனது ஒளியானது தன் திருமேனியிலிருந்து வெளிப்படும் நீல ஒளியில் இல்லையாய் மறைந்துவிடும்படி; பொய்யோ எனும் இடையாளொடும் - இல்லையோ என்று சொல்லத்தக்க நுண்ணிய இடையினை உடைய சீதையோடும்; இளையானொடும் - தம்பியாகிய இலக்குவனோடும்; போனான் - (காட்டு வழியே) நடந்து செல்லலானான்.

மை, அடர்ந்து கருநிறம் உடையது; செறிவான கருமைக்கு உவமையாயிற்று. மரகதம் பசுமைநிறம் படைத்ததாய்க் குளிர்ச்சி தருவதாதலின் நிறத்தோடு தண்மைக்கும் ஒப்பாயிற்று. மறிகடல் நீலநிறம் படைத்ததாய் இடையறாது இயங்கிக்கொண்டுள்ளது; ஆதலின், இயங்குகின்ற இவனது சோபைக்கு உவமையாயிற்று. மழை முகில் - கருநிறம் படைத்து நீர் என்னும் பயனும் உடைய காரணத்தால் உயிர்களுக்கு நலம் செய்வது ஆதலின் உவமையாயிற்று. கருமையும், தண்மையும், இடையறா இயக்கமும், தண்ணளியாகிய கருணையும் இவற்றுள் தனித்தனி காணல் அன்றி இவை நான்கும் ஒருங்கேயுடைய இராமபிரானுக்கு ஒருங்கே உடையதொரு உவமை காண்டல் அரிதாயினமை பற்றி அதிசயித்து இனி உவமை சொல்ல மாட்டாமையாகிய இரக்கமும் தோன்றி “ஐயோ” என முடித்தார் ஆயினும், அதுவே இராமபிரானது பேரழகை அவர் சொல்லி முடித்ததாக ஆயிற்று. “அச்சோ ஐயோ என்னே எற்று எவன் எனுஞ்சொல் அதிசயம் உற இரங்கல்” என்பது சூடாமணி நிகண்டு. திருக்கோவையாரில் (384.) பேராசிரியர், ஐயோ என்னும் சொல்லைக் குறித்து இஃது உவமைக்கண் வந்தது என்று கூறியுள்ளமை கொண்டு ஈண்டும் உவமைக்கண் வந்ததாகக் கொள்ளலாம். நீலநிறம் தன்னுள் கொண்ட எதனையும் வெளிவிடாது தன்னையே காட்டி நிற்கும் ஆதலின், நீலமேனியனாகிய இராமனிடத்திலிருந்து வெளிப்படும் ஒளியில் சூரியனது ஒளி மறைந்துவிட்டது என்றார். 'அழியா அழகு' என்பது என்றும் மாயாத தூய அழகு எனப்பெறும். அழித்தல் - பிறிதொன்றால் இல்லை என்றாக்கப்படும். இவ்வழகினும் சிறந்ததோர் அழகு வந்தால் இது அழகில்லை யென்று அழிக்கப்பெறும். அவ்வாறு ஒன்று இல்லவே இல்லை ஆதலின், இவன் அழகு “அழியா அழகு” ஆயிற்று. “ஓ” காரம் நான்கும் ஐயப்பொருளின்கண் வந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the sun's light was lost in the spreading radiance of his body,
  2. he went on with her whose waist one might call unreal, and with his younger brother;
  3. is it kohl? is it emerald? is it the wave-tossed sea? is it the rain cloud?
  4. Ah! he whose form has a beauty that nothing can surpass.

What the poem says

The Ganges chapter opens with one of the most famous verses of the Irāmāvatāram. Irāmaṉ walks into the forest with Cītai, whose waist is so slender one might doubt it exists, and his brother Ilakkuvaṉ. The dark blue glow of his body is so strong that it seems to swallow the sunlight.

The poet tries four comparisons for that complexion: kohl for its deep darkness, emerald for its coolness, the restless sea for its living movement, the rain cloud for its kindness. Each catches only one quality, none all four together, so he gives up with an exclamation of wonder, ah!, which itself says more than any simile. His beauty is called unfading because no greater beauty could ever outshine it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veyyōṉ oḷi taṉ mēṉiyiṉ viri cōtiyiṉ maṟaiya
poyyō eṉum iṭaiyāḷoṭum iḷaiyāṉoṭum pōṉāṉ;
maiyō! marakatamō! maṟi kaṭalō! maḻai mukilō!
aiyō! ivaṉ vaṭivu eṉpatu ōr aḻiyā aḻaku uṭaiyāṉ.