கம்பராமாயணம் 2005 · அயோத்தியா 6.2

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அளி அன்னது ஒர் அறல் துன்னிய குழலாள் , கடல் அமுதின்
தெளிவு அன்னது ஒர் மொழியாள் , நிறை தவம் அன்னது ஒர் செயலாள் ,
வெளி அன்னது ஒர் இடையாளொடும் விடை அன்னது ஒர் நடையான்
களி அன்னமும் மட அன்னமும் உடன் ஆடுவ கண்டான் .

பொருள் · Meaning in Tamil

அளி அன்னது ஓர் அறல் துன்னிய குழலாள் - வண்டைப் போன்ற (கரிய) ஒப்பற்ற கருமணல் நெருங்கி இருப்பது போன்ற கூந்தலை உடையவளும்; கடல் அமுதின் தெளிவு அன்னது ஓர் மொழியாள் - கடலின்கண் கடைந்து எடுத்த தேவர் அமிழ்தத்தின் தெளிவு போன்றது எனும்படியாகிய ஒப்பற்ற பேச்சினை உடையவளும்; நிறை தவம் அன்னது ஓர் செயலாள் - நிறைந்த தவத்தைப் போன்ற ஒப்பற்ற தூய செயலை உடையவளும்; வெளி அன்னது ஓர் இடையாளொடும் - ஆகாயம் போன்றதாகிய இல்லையான ஒப்பற்ற இடையினை உடையவளுமாகிய சீதையோடும்; விடை அன்னது ஓர் நடையான் - இடபத்தை ஒத்த ஒப்பற்ற நடையினை உடைய இராமன்; களி அன்னமும் - செருக்கினை உடைய ஆண் அன்னமும், மட அன்னமும் - மடப்பத்தை உடைய பெண் அன்னமும்; நடம் ஆடுவ - சேர்ந்து உலாவிடுவதை, கண்டான்.

வண்டு கூந்தலின் கருமைக்கும், கருமணல் கருமையோடு நெறிப்புக்கும் உவமையாம். முனிவர் தவம் போன்றது பெண்டிர் கற்பொழுக்கம். இங்குச் செயல் என்பது கற்பினை. களி, மடம் என்பன ஆண், பெண் என்பனவற்றைக் காட்டும் அடையாளம். தானும் சீதையும் நடப்பது போன்ற குறிப்பினை அவற்றின்பால் கண்டான் இராமன் என்க. 'நடமாடுதல்' என்பது வழக்கின்கண் 'உலாவிடுதல்' என்னும் பொருளில் வருதல் கண்கூடு. இனி அன்னங்கள் நடப்பது நடனம் ஆடுதல் போல உள்ளது என்றலும் ஒன்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With her whose hair was like bees, like dense dark sand, whose speech was like
  2. the clear essence of the nectar churned from the sea, whose conduct was like perfect penance,
  3. and whose waist was like empty space, he whose gait was like a bull's
  4. saw a proud swan and its gentle mate walking about as if in a dance.

What the poem says

As they travel, Irāmaṉ, who walks with the steady stride of a bull, notices a pair of swans, the male proud and the female shy, strolling together. In them he sees an image of himself and Cītai walking side by side.

Cītai is described with a string of comparisons: hair dark as bees and as rippled as black river sand, speech as pure as the nectar of immortality churned from the ocean, conduct as perfect as an ascetic's penance, and a waist so fine it is like empty sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḷi aṉṉatu ōr aṟal tuṉṉiya kuḻalāḷ, kaṭal amutiṉ
teḷivu aṉṉatu ōr moḻiyāḷ, niṟai tavam aṉṉatu ōr ceyalāḷ,
veḷi aṉṉatu ōr iṭaiyāḷoṭum viṭai aṉṉatu ōr naṭaiyāṉ
kaḷi aṉṉamum maṭa aṉṉamum naṭam āṭuva kaṇṭāṉ.