கம்பராமாயணம் 2006 · அயோத்தியா 6.3

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா
மஞ்சங்களை வெலல் ஆகிய நயனங்களை உடையாள் ,
துஞ்சும் களி வரி வண்டுகள் குழலின்படி சுழலக்
கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள் .

பொருள் · Meaning in Tamil

அஞ்சு அம்பையும் - மன்மதனது மலர் அம்புகள் ஐந்தனையும், ஐயன்தனது - இராமனது; அலகு - கூர்மையான; அம்பையும் - கணையையும்; அளவா - அளந்து (தனக்குவமை யாகானென்று தள்ளி); நஞ்சங்களை - கொடிய விடங்களை; வெலல் ஆகிய - வெல்லும் தன்மை படைத்தனவாகிய; நயனங்களை உடையாள் - அழகிய கண்களை உடைய சீதை; துஞ்சும் களி வரி வண்டுகள் - உறங்கும் செருக்குடைய அழகிய வண்டுகள்; குழலின்படி - கூந்தலிற் படியும் தன்மையில்; சுழலும் - சுற்றியிருக்கப்பெற்ற; கஞ்சங்களை - தாமரை மலர்களை; மஞ்சன் கழல் - மைந்தனாகிய இராமனது திருவடிகள்; நகுகின்றது - உவமையாகாதென்று இகழ்ந்து சிரிப்பதனை; கண்டாள் -.

தாமரை, முல்லை, அசோகு, மா, நீலம், என்பன மன்மதனது மலர் அம்புகளாம். இங்கு மலர் கருதாது அம்பு என்பதுபற்றிக் கூறப்பெற்றது. தேனுண்டு உறங்கும் செருக்குடைய வண்டுகள். குழலின்படி - வேய்ங்குழல் போல ரீங்காரித்து என்றும் நெய்குழல்போல போவது வருவது ஆகி என்றும் ஆம். இராமனது திருவடி அழகிற்குத் தாமரை ஒப்பாகாமை கருதி மகிழ்ந்தாள் சீதை என்றவாறாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She whose eyes, having measured the five arrows of Love and the sharp arrows of her lord
  2. and found them wanting, could overcome deadly poisons,
  3. saw the lotuses, around which striped bees, drunk and drowsy, circled as if about her hair,
  4. being laughed to scorn by the feet of the young hero.

What the poem says

Now it is Cītai's turn to look. Her eyes are more piercing than the five flower arrows of Maṉmataṉ, the god of love, or the sharp arrows of Irāmaṉ himself, and more potent than poison.

She sees lotuses with honey-drunk bees circling them, and feels that Irāmaṉ's feet, more beautiful than any lotus, are laughing at the flowers for presuming to be compared with them. She is delighted. The phrase about the bees can also mean that they hum like a flute or dart back and forth like a weaver's shuttle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1añcu ampaiyum aiyaṉtaṉatu alaku ampaiyum aḷavā
nañcaṅkaḷai velal ākiya nayaṉaṅkaḷai uṭaiyāḷ,
tuñcum kaḷi vari vaṇṭukaḷ kuḻaliṉpaṭi cuḻalum
kañcaṅkaḷai mañcaṉ kaḻal nakukiṉṟatu kaṇṭāḷ.