கம்பராமாயணம் 2007 · அயோத்தியா 6.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மா கந்தமும் - மிக்க நறுமணத்தையும்; மகரந்தமும் - வாசனைப் பொடியும் கலந்து பொருந்திய; அளகம் - கூந்தல்; தரும் - பெற்ற; மதியின் பாகம் தரும் நுதலாளொடு - அரைச்சந்திரன் வடிவாயமைந்த நெற்றியை உடைய சீதையோடு; பவளம் தரும் இதழான் - பவளத்துக்குச் செம்மை தரும் திரு அதரத்தை உடைய இராமன்; மேகம் மின்னொடு தனி வருகின்றது என்ன - மேகம் மின்னலோடு சேர்ந்து தனித்து வருகின்றது போலவும்; மிளிர் பூண் - அழகிய அணி அணிந்த; நாகம் - ஆண்யானை; பிடியோடு தனி வருகின்றது என்ன - பெண் யானையோடு தனித்து வருகின்றது போலவும்; நடவா - நடந்து சென்று.
நறுமணப் பொடிகளையும் மலர்களில் உள்ள மகரந்தங்களையும் கூந்தலுக்கு இட்டு மணம் ஊட்டல் வழக்கு. கூந்தலின் கீழ் உள்ள நெற்றியை 'அளகம் தரும் மதியின் பாகம்' என்றார். குளகச்செய்யுள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With her whose forehead, like a part of the moon, lay beneath hair rich
- with strong fragrance and pollen, he whose lips gave coral its colour
- walked on, like a cloud coming alone with its lightning,
- like an elephant in gleaming trappings coming alone with its mate.
What the poem says
Irāmaṉ and Cītai walk together through the countryside. Her hair is perfumed with scented powders and flower pollen, as was the custom, and her forehead below it is shaped like the half moon. His lips are so red they seem to lend colour to coral.
The pair are a dark cloud with its flash of lightning, or a bull elephant walking alone with its mate. The verse is grammatically incomplete: its final word, walked, leads into the following verse, which tells what Irāmaṉ saw.