கம்பராமாயணம் 2008 · அயோத்தியா 6.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தொளை கட்டிய கிளை - தொளை பொருந்திய புல்லாங்குழலிலிருந்து; முட்டிய - தாக்கி எழுப்பிய; சுருதி - காதால் கேட்டு அனுபவிக்கும் தன்மையதான; சுவை அமுதின் - சுவையுடைய இசை அமுதம் போலவும்; கிளை கட்டிய கருவி - நரம்புகள் இணைத்துக் கட்டப்பெற்ற யாழிலிருந்து; கிளர் இசையின் - உண்டாகின்ற இசையைப் போலவும்; பசை நறவின் - சாரமுள்ள தேனைப் போலவும், விளை கட்டியின் - நன்றாக விளைந்த பாகுக் கட்டி போலவும்; மதுரித்து எழு - இனிமை உடையதாக எழுகின்ற; கிளவி - பேச்சினை உடைய; கிளி - கிளி போல்பவளாகிய சீதையினது; விழி போல் - கண்களைப் போல; களை கட்டவர் - களை பறிப்பவர்; தளைவிட்டு எறி - வயலிலிருந்து வீசி எறிகின்ற; குவளைத் தொகை கண்டான் - குவளை மலர்களின் கூட்டத்தைப் பார்த்தான்.
சீதையின் சொல்லினிமைக்குக் குழலிசை, யாழிசை, தேன், கட்டி என இவை உவமையாம். களை பிடுங்குவார் எறிந்த கருங்குவளை மலர்கள் சீதையின் கண்போலத் தோன்றிய இராமனுக்கு என்பதாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Sweet as the nectar of melody struck from the holed flute,
- as the rising music of the stringed lute, as rich honey
- and as well-set jaggery is the speech of the parrot-like lady; like her eyes
- were the heaps of blue water lilies that the weeders tore loose and tossed aside, and he saw them.
What the poem says
Irāmaṉ sees farm workers weeding the paddy fields and throwing out the dark blue water lilies that grow among the rice. The flowers remind him of Cītai's eyes.
Her voice is praised in four comparisons: as sweet as the music of a flute, as the notes of a stringed yāḻ, as honey, and as solid jaggery. She is called a parrot because of her sweet speech.