கம்பராமாயணம் 2012 · அயோத்தியா 6.9

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பரிதி பற்றிய பல் பகல் முற்றினர் ,
மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇச்
சுருதி கற்று உயர் தோம் இலர் சுற்று உறும்
விரி திரைப் புனல் கங்கையை மேவினார் .

பொருள் · Meaning in Tamil

பருதி பற்றிய - சூரியனைப் போன்ற ஒளிபடைத்த; பல்கலன் - பல அணிகலன்களை, முற்றினர் - நிறைய அணிந்துள்ள மூவரும்; மருத வைப்பின் - வயல்நிலங்களாகிய செல்வமுடைய; வளம் கெழு நாடு ஒரீஇ - வளம் பொருந்திய நாடு கடந்து சென்று; சுருதி கற்று உயர் - வேதங்களை (இடையறாது) கற்று உயர்ந்த; தோம் இலர் - குற்றம் இல்லாத முனிவரர்; சுற்றுறும் - எப்பொழுதும் சுற்றி இருக்கப் பெற்ற; விரி திரைப்புனல் கங்கையை - விரிந்த அலைகளையுடைய நீர் நிரம்பிய கங்கையாற்றை; மேவினார் - அடைந்தார்.

தாம் செய்ய வேண்டிய விரத நியமங்களைச் செய்துகொண்டு, இணையாகத் தங்குதற்கு ஏற்ற இடம் ஆதலாலும், தன்னை அடைந்தாரது பாவத்தைப் போக்குதலானும் முனிவரர் கங்கையைச் சுற்றித் தங்கித் தவம் செய்வாராயினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Wearing many ornaments that shone like the sun,
  2. they left behind the rich land of fertile farm country
  3. and reached the Gaṅgai with its spreading waves, around which dwell
  4. faultless sages, exalted by their learning of the Veda.

What the poem says

Leaving the farmlands of the Kōcala kingdom behind, the three arrive at the Ganges (Gaṅgai). Its banks are home to many sages who have mastered the Vedas.

The commentary explains why ascetics settle beside the Ganges: it is a fitting place to carry out their vows and disciplines, and the river is believed to wash away the sins of all who come to it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paruti paṟṟiya pal kalaṉ muṟṟiṉar,
maruta vaippiṉ vaḷam keḻu nāṭu orīi
curuti kaṟṟu uyar tōmilar cuṟṟuṟum
viri tiraip puṉal kaṅkaiyai mēviṉār.