கம்பராமாயணம் 2017 · அயோத்தியா 6.14

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொழியும் கண்ணீர்ப் புதுப் புனல் ஆட்டினர் ,
மொழியும் இன் சொலின் மொய்ம் மலர் சூட்டினர் ,
அழிவு இல் அன்பு எனும் ஆர் அமுது ஊட்டினர் ,
வழியின் வந்த வருத்தத்தை வீட்டினர் .

பொருள் · Meaning in Tamil

கண்ணின் பொழியும் புதுப்புனல் ஆட்டினர் - முனிவர் கண்களில் பொழிகின்ற கண்ணீராகிய புதிய நீரால் ஆட்டி; மொழியும் இன்சொலின் மொய்ம்மலர் சூட்டினர் - பேசுகின்ற இன்சொல்லாகிய நெருங்கிய மலர்களைச் சூட்டி; அழிவு இல் - கெடுதல் இல்லாத; அன்பு எனும் ஆர் அமிர்து ஊட்டினர் - அன்பு எனும் அரிய அமுதத்தை உண்ணக் கொடுத்து; (அம் முனிவர்) வழியில் வந்த வருத்தத்தை - (அம் மூவரும்) வழிநடையால் உடையராய வருத்தத்தை, வீட்டினர் - இல்லாதபடி போக்கினர்.

முனிவர்கள் இராமன் முதலிய மூவர்க்கும் உண்டாகிய வழிநடை வருத்தம் போக்கியவாறு. கண்ணில் வழியும் நீரால் அவர்களைக் குளிப்பாட்டி, இன் சொற்களாகிய மலர்களைச் சூட்டி, அன்பாகிய அமுதூட்டிப் போக்கினர். மூன்றும் முறையே செயல், சொல், மனம் மூன்றாலும் அவர்கள் இராமன்பால் கொண்ட அன்பின் வெளிப்பாடாயின. “புனையும் கண்ணி எனதுடைய வாசகம் சொல்மாலையே” என்ற ஆழ்வார் பாசுரம் 'இன்சொலின் மொய்ம்மலர்' என்பதனோடு ஒத்தது. “பொழிந்த உண்கண் நீர்ப் புதுப் புனல் சூட்டினார்” என்ற நகர்நீங்கு படல அடிகளை (1820.) இங்கு முதலடியோடு ஒப்பு நோக்குக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They bathed them in the fresh water pouring from their eyes,
  2. they crowned them with the clustered flowers of the sweet words they spoke,
  3. they fed them the precious nectar of unfailing love,
  4. and so they took away the weariness of the road.

What the poem says

The sages welcome their guests as one would a revered visitor, with a bath, garlands and food, but each offering is made of their devotion: the bath is their tears of joy, the garlands are their loving words, and the food is their love itself.

The three gifts express love through deed, word and mind. The image of words as a garland recalls an Āḻvār hymn, and the bath of tears echoes an earlier line in the chapter on Irāmaṉ's departure from the city.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poḻiyum kaṇṇiṉ putup puṉal āṭṭiṉar,
moḻiyum iṉ coliṉ moym malar cūṭṭiṉar,
aḻivu il aṉpu eṉum ār amirtu ūṭṭiṉar,
vaḻiyil vanta varuttattai vīṭṭiṉar.