கம்பராமாயணம் 2022 · அயோத்தியா 6.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தள்ளும் நீர்ப் பெருங் கங்கைத் தரங்கத்தால் - மோதுகின்ற நீரை உடைய பெரிய கங்கையின் அலைகளால்; (அங்கே சீதையோடு முழுகி எழுகின்ற இராமன்) வள்ளி நுண் இடை மாமலராளொடும் - கொடி போன்ற நுண்ணிய இடையை உடைய தாமரையில் வீற்றிருக்கும் திருமகளுடன்; வெள்ளி வெண்நிறப் பாற்கடல் - வெள்ளி போன்ற வெண்மையான நிறத்தை உடைய பாற்கடலில் மேல்; மேலைநாள் - முன்னொரு காலத்தில்; பள்ளி நீங்கிய பான்மையின் - அனந்தசயனத்தில் அறிதுயில் ஒழிந்து எழுந்து நின்ற தன்மை போல; தோன்றினான் - தோற்றமளித்தான்.
கங்கை அலைகள் வெண்மையாய் உள்ளன. அதன்மேல் இராமனும் சீதையும் தோன்றுதல் திருப்பாற்கடலில் திருமால் திருமகளோடு எழுந்து நின்றாற் போலும் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Amid the waves of the great Gaṅgai with its pushing waters,
- with the lady of the great flower, whose waist is fine as a creeper,
- he looked as he did in former days when he rose from his couch
- on the silver-white sea of milk.
What the poem says
Rising from the white waves of the Ganges together with Cītai, Irāmaṉ looks like Viṣṇu getting up from his serpent couch on the white ocean of milk, with his consort Tirumakaḷ (Lakṣmī), the goddess seated on the lotus.
The image reminds the reader that the bathing couple are Viṣṇu and Lakṣmī themselves, born on earth as Irāmaṉ and Cītai.