கம்பராமாயணம் 2023 · அயோத்தியா 6.20

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வஞ்சி நாணி வணங்க , மட நடைக்கு
அஞ்சி அன்னம் ஒதுங்க , அடிக்கு மென்
கஞ்சம் நீரில் ஒளிப்பக் கயல் புகப்
பஞ்சி மெல் அடிப் பாவையும் ஆடினாள் .

பொருள் · Meaning in Tamil

பஞ்சின் மெல்லடிப் பாவையும் - செம் பஞ்சு போன்ற மென்மையான பாதங்களை உடைய சீதையும்; இடைக்கு வஞ்சி நாண - தன் இடைக்கு வஞ்சிக் கொடி நாணப்பட்டுத் தோற்றொதுங்க; மடநடைக்கு அன்னம் அஞ்சி ஒதுங்க - அழகிய தன் நடைக்கு அன்னப் பறவை தோற்றுப் பயந்து பின்னிட; அடி அன்ன கஞ்சம் நீரில் ஒளிப்ப - தன் பாதம் போன்ற தாமரை தோற்றுத் தண்ணீரில் மறைந்துகொள்ள; கயல் உக - கயல் மீன்கள் (கண்ணுக்குத் தோற்று) கெட; ஆடினாள் - நீராடினாள்.

வஞ்சி, அன்னம், தாமரை, கயல் ஆகியவை நீரில் உள்ளவை. நீராடும் சீதையின் உறுப்புநலன் கண்டு அவை தோற்றதாகக் கற்பனை செய்தார். கயல் என்பதனால் கண்ணுக்குத் தோற்று என்பது வருவிக்கப் பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the vañci creeper was shamed by her waist, and the swan, fearing
  2. her gentle gait, drew aside, and the lotus like her feet
  3. hid itself in the water, and the kayal fish fled away,
  4. the doll-like lady with feet soft as cotton bathed too.

What the poem says

Cītai now bathes, and everything around the water that poets usually compare to a woman's beauty admits defeat. The slender vañci creeper is ashamed before her waist, the swan shrinks from her graceful walk, the lotus, a standard image for feet, hides under the water, and the kayal fish, the usual comparison for eyes, darts away.

Her feet are compared to soft red-dyed cotton. The eyes are not named but understood from the mention of the fish.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vañci nāṇa iṭaikku, maṭa naṭaikku
añci aṉṉam otuṅka, aṭi aṉṉa
kañcam nīril oḷippak kayal uka
pañci mel aṭip pāvaiyum āṭiṉāḷ.