கம்பராமாயணம் 2025 · அயோத்தியா 6.22

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால் - நுரைகளாகிய வெண்மையான கொழுந்துகள் நீரின்மேல் ஓங்கி எழுந்து வளைந்து சூழ்வதால்; நரைத்த கூந்தலின் - நரை பாய்ந்த கூந்தலை உடையாள் போல உள்ள; நங்கை மந்தாகினி - பெண்ணாகிய கங்கை; உரைத்த - பாராட்டப் பெறுகின்ற; சீதை - சீதையினது; தனிமையை - பெண்டிர் துணை இல்லாத தனிமையை; உன்னுவாள் - கருதுபவளாய்; செவிலியின் - செவிலித் தாய் போல; திரைக் கை நீட்டி - அலைகளாகிய கைகளை நீட்டி; ஆட்டினாள் - நீராட்டினாள்.

கங்கை செவிலித்தாயாக இருந்து சீதையை நீராட்டுவதாகக் கற்பனை செய்தார். செவிலித்தாய் என்பதற்கு ஏற்பக் கங்கைக்கு நரைத்த கூந்தலாக நுரைக்கொழுந்தைக் கூறினார். “நரை விராவுற்ற நறுமென் கூந்தல் செம்முது செவிலியர்” (அகநா. 254) என்பதும் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the white tips of her foam rose high and curled about,
  2. the lady Mantākiṉi seemed to have greying hair;
  3. thinking of how alone the praised Cītai was,
  4. she stretched out the hands of her waves and bathed her like a foster mother.

What the poem says

The Ganges, here called Mantākiṉi, sees that Cītai has no women attendants to help her bathe, so she acts as an old nurse and washes her with wave-hands.

The white foam curling on the water becomes the nurse's grey hair. In Tamil poetry the foster mother who raises a noble girl is traditionally an elderly woman; an Akanāṉūṟu poem speaks of such nurses with grey-streaked hair.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nuraik koḻuntu eḻuntu ōṅki nuṭaṅkalāl
naraitta kūntaliṉ naṅkai mantākiṉi,
uraitta cītai taṉimaiyai uṉṉuvāḷ,
tiraikkai nīṭṭic ceviliyiṉ āṭṭiṉāḷ.