கம்பராமாயணம் 2026 · அயோத்தியா 6.23

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மங்கை வார் குழல் கற்றை மழைக் குலம்
தங்கும் நீரிடைத் தாழ்ந்து குழைப்பன ,
கங்கையாற்றுடன் ஆடும் கரியவள்
பொங்கும் நீர் சுழி போவன போன்றவே .

பொருள் · Meaning in Tamil

மங்கை வார் குழல் கற்றை மழைக்குலம் - சீதையின் நீண்ட கூந்தல் தொகுதியாகிய மேகக் கூட்டம்; தங்கும் நீரிடைத் தாழ்ந்து குழைப்பன - அவள் குளிக்கின்ற நீரிடத்து உள் தாழ்ந்து சுழலுவன (எது போலும் எனில்); கங்கையாற்றுடன் ஆடும் கரியவள் - கங்கை யாற்றுடனே வந்து கலக்கின்ற யமுனா நதியின்; பொங்கு நீர்ச்சுழி - மேல் எழும்பிய கரிய நீர்ச்சுழிகள்; போவன போன்ற - போகின்ற தன்மை போலும்.

கங்கை வெண்ணிறமுடையது. யமுனை கருநிறம் உடையது. சீதையின் கூந்தல் முழுகுங்கால் நீரில் சுழலுதல் யமுனையின் சுழி போல் தோன்றுவதாகக் கற்பனை. கங்கையும் யமுனையும் கலக்கின்ற இடம் பிரயாகையாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lady's long tresses, dark as a mass of clouds,
  2. sinking into the water where she stood and swirling about,
  3. looked like the surging eddies of the dark river
  4. that comes to bathe together with the Gaṅgai.

What the poem says

As Cītai dips under the water, her long black hair swirls in the white Ganges. It looks like the dark whirlpools of the Yamunā, the dark-watered river that merges with the Ganges.

The commentary notes that the two rivers meet at Pirayākai (Prayāga), where the contrast of white and dark waters is famous.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṅkai vār kuḻal kaṟṟai maḻaik kulam
taṅku nīriṭait tāḻntu kuḻaippaṉa,
kaṅkai yāṟṟuṭaṉ āṭum kariyavaḷ
poṅku nīrc cuḻi pōvaṉa pōṉṟavē.