கம்பராமாயணம் 2027 · அயோத்தியா 6.24

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சுழி பட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்றுத் தன்
விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து
முழுகித் தோன்றுகின்றாள் , முதல் பால் கடல்
அழுவத்து அன்று எழுவாள் என ஆயினாள் .

பொருள் · Meaning in Tamil

சுழிபட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்று - சுழிகள் உண்டாகப் பெற்று மேல் எழும்பி அசைகின்ற பேரொலி உடைய கங்கை ஆற்றில், தன் விழியின் சேல் உகள் - தன் கண்களைப் போல் மீன்கள் துள்ளுகின்ற, வால் நிற வெள்ளத்து - வெண்மையான நிறமுடைய நீர்ப்பெருக்கில்; முழுகித் தோன்றுகின்றாள் - முழுகி எழும்புகின்ற சீதை; முதல் - ஆதி நாள்; பாற்கடல் அழுவத்து - பாற்கடற் பெருக்கிலே; அன்று எழுவாள் - அன்று தோன்றியவளாகிய திருமகள்; எனல் ஆயினாள் - என்று சொல்லும்படி தோன்றினாள்.

கங்கையின் வெண்ணீர்ப் பெருக்கில் முழுகி மேல் எழும் சீதை திருப்பாற்கடல் கடைந்தபோது அதன் பரப்பின் மேல் எழுந்த திருமகள் போல்வாள் ஆயினள் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the swirling, swelling, ever-roaring river,
  2. in its white flood where cēl fish like her own eyes leap,
  3. she plunged and rose again, and seemed to be the one
  4. who rose that day, in the beginning, from the expanse of the sea of milk.

What the poem says

Cītai dives under the white water of the Ganges, among fish that look like her eyes, and comes up again. She looks just like Tirumakaḷ, the goddess Lakṣmī, rising out of the ocean of milk when the gods and demons churned it at the beginning of time.

The image again identifies Cītai with Lakṣmī, as the earlier verse identified Irāmaṉ with Viṣṇu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuḻipaṭṭu ōṅkiya tūṅku oli āṟṟut taṉ
viḻiyiṉ cēl ukaḷ vāl niṟa veḷḷattu
muḻukit tōṉṟukiṉṟāḷ, mutal pāṟkaṭal
aḻuvattu aṉṟu eḻuvāḷ eṉal āyiṉāḷ.