கம்பராமாயணம் 2028 · அயோத்தியா 6.25

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1செய்ய தாமரைத் தாள் பண்டு தீண்டலால்
வெய்ய பாதகம் தீர்த்து விளங்கினாள் ;
ஐயன் மேனி எலாம் அளைந்தாள் ; இனி
வையம் மா நரகத்திடை வைகுமோ ?

பொருள் · Meaning in Tamil

செய்ய தாமரைத் தாள் பண்டு தீண்டலால் - சிவந்த செந்தாமரை போலும் திருமாலின் (இராமனின்) திருவடிகள் பண்டு தொடப்பெறுதலால்; வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள் - உலகோரது கொடிய பாவங்களை எல்லாம் போக்கி விளங்குபவளாகிய கங்கை; (இப்போது இராமனாகிய திருமால் நீராடலால்) ஐயன் மேனி எல்லாம் அளைந்தாள் - இராமனது திருமேனி முழுதும் தீண்டப் பெற்றவளாக ஆனாள்; இனி - இனிமேல், வையம் - கங்கையில் முழுகும் இவ் உலகம்; மா நரகத்திடை வைகுமோ - கொடிய நரகத்திடத்துத் தங்குமோ (தங்காது).

திருவடி பட்டது திருவிக்கிரமன் ஆனபோது. திருவடி அளவிலேயே கொடிய பாவங்களைப் போக்குபவள் இப்போது திருமேனி முழுதும் பட்டபடியால் வையத்தை நரகத்திலிருந்து நீக்குவாள் என்பது சொல்லவும் வேண்டுமோ என்றவாறாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because long ago his red lotus feet touched her,
  2. she shines, washing away grievous sins;
  3. now she has embraced the lord's whole body; from now on
  4. will the world remain in the great hell?

What the poem says

Long ago only Viṣṇu's foot touched the Ganges, when as Trivikrama he strode through the heavens, and that alone gave her the power to wash away the worst of sins. Now Irāmaṉ, who is Viṣṇu, has bathed in her with his whole body.

If the touch of his foot was enough to cleanse sinners, the poet asks, how could anyone who bathes in her now still end up in hell?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceyya tāmarait tāḷ paṇṭu tīṇṭalāl
veyya pātakam tīrttu viḷaṅkuvāḷ;
aiyaṉ mēṉi elām aḷaintāḷ; iṉi
vaiyam mā narakattiṭai vaikumō?