கம்பராமாயணம் 2032 · அயோத்தியா 6.29

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1துடியன் , நாயினன் , தோல் செருப்பு ஆர்த்த பேர்
அடியன் , அல் செறிந்த அன்ன நிறத்தினான் ,
நெடிய தானை நெருக்கினன் , நீர் முகில்
இடியினோடு எழுந்தால் அன்ன ஈட்டினான் .

பொருள் · Meaning in Tamil

(குகன்) துடியன் - துடி என்னும் பறை உடையவன்; நாயினன் - வேட்டைநாய்களை உடையவன்; தோற் செருப்பு ஆர்த்த பேர் அடியன் - தோலாற் செய்த மிதியடி இறுக்கிய பெரிய பாதங்களை உடையவன்; அல் செறிந்தன்ன நிறத்தினான் - இருள் நெருங்கித் திரண்டால் ஒத்த கருநிறம் உடையவன்; நெடிய தானை நெருங்கலின் - தன்னுடைய மிகப்பெரிய சேனை நெருங்கி வருதலின்; நீர் முகில் - பெய்யும் மேகம்; இடியினோடு எழுந்தால் அன்ன ஈட்டினான் - இடியோடு கூடி மேற் கிளம்பினாற் போன்ற தன்மை கொண்டவன்.

மேகம் குகனுக்கும், இடி ஆர்ப்பரிப்பு அவன் சேனைக்கும் உவமையாம். வேட்டுவராதலின் துடி, நாய் முதலியன கூறப்பெற்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He had a tuṭi drum and hunting dogs; his great feet were bound
  2. in leather sandals; his colour was like the gathered night;
  3. with his vast host crowding close about him, he was like
  4. a rain cloud rising up together with thunder.

What the poem says

The description of Kukaṉ continues. As a hunter chief he carries the tuṭi, a small hourglass drum, and keeps hunting dogs. He wears leather sandals and is as dark as thick darkness.

Surrounded by his large, noisy following, he looks like a dark rain cloud rising with a roll of thunder: the cloud is Kukaṉ, the thunder the clamour of his men.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuṭiyaṉ, nāyiṉaṉ, tōṟ ceruppu ārtta pēr
aṭiyaṉ, al ceṟintaṉṉa niṟattiṉāṉ,
neṭiya tāṉai neruṅkaliṉ, nīr mukil
iṭiyiṉōṭu eḻuntālaṉṉa īṭṭiṉāṉ.