கம்பராமாயணம் 2034 · அயோத்தியா 6.31

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காழம் இட்ட குறங்கினன் - காழம் என்னும் ஒருவகை உடையை இறுக அணிந்த துடையை உடையவன்; கங்கையின் ஆழம் இட்ட நெடுமையினான் - கங்கையின் ஆழத்தைக் கண்டறிந்த பெருமை படைத்தவன்; அரை தாழ விட்ட செந்தோலன் - இடுப்பிலிருந்து கீழே தொங்கவிடப்பட்ட சிவந்த வார்ப்பட்டை உடையவன்; தயங்குற - விளங்கும்படி; சூழவிட்ட - இடுப்பைச் சுற்றிக் கட்டிய; தொடு புலி வாலினான் - ஒன்றோடொன்று சேர்த்துக் கட்டப் பெற்ற புலி வாலை உடையவன்.

காழம் என்பது இடுப்பிலிருந்து தொடைவரை அணியும் சிறிய காற்சட்டை. காழகம் எனவும் வரும். அரையிலிருந்து தொங்கவிடப்பெற்ற செந்நிறத் தோலாகிய வார்ப் பட்டை அம்பு முதலியன தீட்டுதற்காம் என்க. புலிவால்களை ஒன்றோடொன்று பிணைத்து இடுப்பைச் சுற்றிக் கட்டியுள்ளான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His thighs were clad in short breeches; he had the greatness of one
  2. who had sounded the depth of the Gaṅgai; a red leather strap hung down
  3. from his waist; and tied around it, gleaming,
  4. was a belt of tigers' tails joined together.

What the poem says

The poet continues to describe Kukaṉ's appearance. He wears tight short breeches reaching from waist to thigh, and a red leather strap hangs from his waist, used for sharpening arrows and other weapons. Around his waist he has knotted a belt made of tigers' tails tied end to end.

He is also said to know the depth of the Ganges, a mark of his long mastery of the river.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāḻam iṭṭa kuṟaṅkiṉaṉ, kaṅkaiyiṉ
āḻam iṭṭa neṭumaiyiṉāṉ, arai
tāḻa viṭṭa cen tōlaṉ, tayaṅkuṟac
cūḻa viṭṭa toṭu puli vāliṉāṉ.