கம்பராமாயணம் 2035 · அயோத்தியா 6.32

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பல் தொடுத்த அன்ன பல்கு கவடியன் ,
கல் தொடுத்தன்ன போலும் கழலினன் ,
அல் தொடுத்தன்ன குஞ்சியன் , ஆளியின்
நெற்றெடு ஒத்து நெரி புருவத்தினான் .

பொருள் · Meaning in Tamil

பல் தொடுத்து அன்ன சூல் பல் கவடியன் - பற்களைத் தொடுத்தாற் போன்ற உட்குடைவான பல பலகறைகளை அணிந்தவன்; கல் தொடுத்து அன்ன போலும் கழலினான் - கற்களை ஒன்று சேர வைத்தாற் போன்ற திண்ணிய வீரக்கழலை உடையவன்; அல் தொடுத்தன்ன குஞ்சியன் - இருளைப் பின்னினாற் போன்ற கரிய தலை மயிரை உடையவன்; ஆளியின் நெற்றொடு ஒத்து நெரிந்த புருவத்தான் - ஆளிச் செடியின் வற்றி உலர்ந்த காயைப் போன்று நெறிப் புடைய புருவத்தை உடையவன்.

கவடி - பலகறை. சோழி எனவும் வழங்கும். தற்காலத்துக் குறவர்கள் இவ்வகை மணிகளைக் கோத்தணிதல் கண்கூடு. ஆடவர் தலைமயிரைக் குஞ்சி என்றல் வழக்கு. ஆளி நெற்று புருவ நெரிப்புக்கு உவமையாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He wore many hollow cowrie shells strung like rows of teeth;
  2. his warrior's anklets were as if made of strung stones;
  3. his hair was like woven darkness; and his brows
  4. were knitted like the dried pod of the āḷi plant.

What the poem says

Kukaṉ wears a string of cowrie shells that look like a row of teeth, an ornament the commentary says the hill peoples still wore in its own day. His warrior's anklet is heavy as stone, his hair is black as braided night, and his brows are furrowed and wrinkled like a dried, shrivelled āḷi pod.

The details build a picture of a rugged, fierce forest chieftain, very different from the courtly figures of Ayōttī.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pal toṭuttaṉṉa pal cūl kavaṭiyaṉ,
kal toṭuttaṉṉa pōlum kaḻaliṉāṉ,
al toṭuttaṉṉa kuñciyaṉ, āḷiyiṉ
neṟṟoṭu ottu nerinta puruvattāṉ.