கம்பராமாயணம் 2036 · அயோத்தியா 6.33

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பெண்ணை வன் செறும்பில் பிறங்கிச் செறி
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன்கையான் ,
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன்
எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான் .

பொருள் · Meaning in Tamil

பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி - பனைமரத்தினது வலிய சிறாம்பு போல விளங்கி நெருங்கியுள்ள; வண்ண வன் மயிர் - கருநிறம் படைத்த வலிய மயிர்கள்; வார்ந்து உயர் முன் கையன் - நீண்டு ஒழுகப்பெற்றுள்ள முன்கையை உடையவன்; கண் அகன் தடமார்பு எனும் கல்லினன் - இட மகன்ற விசாலமான மார்பு என்கின்ற கல்லினை உடையவன்; எண்ணெய் உண்ட இருள்புரை மேனியன் - எண்ணெய் பூசப் பெற்ற இருளை ஒத்த கரிய பளபளப்பான உடம்பை உடையவன்.

பனஞ்செறும்பு கருமைக்கும், மேல் குத்தி நிற்கும் தன்மைக்கும், முன்கை மயிர்க்கும் உவமையாம். “இரும்பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர்” “பனஞ் செறும்பு அன்ன பன் மயிர் முன்கை” என்பனவற்றை நோக்குக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His forearms were long and covered with thick, coarse dark hair
  2. standing out dense like the tough fibres of the palmyra palm;
  3. he had a chest broad and wide like a slab of rock;
  4. his body was like darkness that had drunk oil.

What the poem says

Kukaṉ's forearms bristle with stiff black hair like the coarse fibres of the palmyra palm, an image found also in older Tamil poetry. His broad chest is like a wide stone slab.

His glossy dark body is compared to darkness that has soaked up oil: black and shining, like skin rubbed with oil.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1peṇṇai vaṉ ceṟumpiṉ piṟaṅkic ceṟi
vaṇṇa vaṉ mayir vārntu uyar muṉ kaiyaṉ,
kaṇ akaṉ taṭa mārpu eṉum kalliṉaṉ
eṇṇey uṇṭa iruḷ purai mēṉiyāṉ.