கம்பராமாயணம் 2038 · அயோத்தியா 6.35

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஊற்று மொய் நறவு ஊனொடு மீன் நுகர்
நாற்றம் மேய நகை இல் முகத்தினான் ,
சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான் ,
கூற்றம் அஞ்சக் குமிறும் குரலினான் .

பொருள் · Meaning in Tamil

ஊற்றமே மிக - வலிமை மிகும்படி; ஊனொடு மீன் நுகர் - விலங்குகளின் இறைச்சியோடு மீனையும் தின்று; நாற்றம் மேய - புலால் நாற்றம் பொருந்திய; நகை இல் முகத்தினான் - சிரிப்பு என்பது சிறிதும் இல்லாத (கடு கடுப்பான) முகத்தினை உடையவன்; சீற்றம் இன்றியும் - கோபம் இல்லாத போதும்; தீ எழ நோக்குவான் - கனல் கக்குமாறு பார்ப்பவன்; கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான் - இயமனும் பயப்படும்படி அதிர்ந்து ஒலிக்கின்ற குரலை உடையவன்.

புலால் நாறும் வாய், சிரிப்பற்ற முகம், கனல் பார்வை, இடிக்குரல் என்று வேட்டுவச்சாதி இயல்புக்கேற்பக் குகன் தன்மைகளைக் கூறினார். கூற்றம் - உம்மை தொக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Eating meat and fish to build his strength,
  2. he had an unsmiling face that smelled of flesh;
  3. even without anger, he looked as if fire would burst out;
  4. his voice rumbled so that even Death would be afraid.

What the poem says

The portrait of Kukaṉ is completed with traits the poet links to his life as a hunter: he eats meat and fish to stay strong, so his mouth smells of flesh; his face is stern and never smiles; his eyes seem to blaze even when he is calm; and his voice is a roar that would frighten even Kūṟṟuvaṉ, the god of death.

This rough exterior is set up deliberately, so that the tenderness of his devotion to Irāmaṉ will stand out all the more.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūṟṟamē mika ūṉoṭu mīṉ nukar
nāṟṟam mēya nakai il mukattiṉāṉ,
cīṟṟam iṉṟiyum tī eḻa nōkkuvāṉ,
kūṟṟam añcak kumuṟum kuraliṉāṉ.